மும்பை : கிரிக்கெட்டில் எப்போது ரசிகர்கள் மனப்பான்மை அதிகளவு வளர்ந்ததோ அதன் மூலம் தற்போது உனக்கு பிடித்த வீரர் பெரியவனா இல்லை எனக்கு பிடித்த வீரர் பெரியவனா என்ற விவாதங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.
ஒரு காலத்தில் எல்லாம் இந்தியா என்ற ஒரு அணிக்காக விளையாடும் வீரர்களை ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆதரிப்பார்கள். ஆனால் தற்போது ரோகித் சர்மா ஆட்டம் இழந்தால் விராட் கோலியை ரசிகர்கள் கொண்டாடுவதும், கோலி ஆட்டம் இழந்தால் ரோகித்தை ரசிகர்கள் கொண்டாடுவதும் என இந்திய ரசிகர்கள் பிளவு பட்டு இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் யார் சிறந்த வீரர் என்ற கேள்வி மட்டுமல்லாமல் இந்தியாவின் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்வியும் அடிக்கடி வருகிறது. இந்த சூழலில் பொதுவாக யார் பிரபலமாக இருக்கிறார்களோ, அவரை கம்பீருக்கு பிடிக்காது என்று கூறப்பட்டு வரும் நிலையில் கம்பீரிடமே சென்று உங்களுக்கு பிடித்த கேப்டன் யார்? நீங்கள் அவர்களுக்கு கீழ் விளையாடிய வகையில் யார் சிறந்தவர் என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு கம்பீர் அளித்த பதிலை தற்போது பார்க்கலாம். இது மிகவும் சர்ச்சையான கேள்வி. இதன் மூலம் நான் பதிலளித்தால் என்னையே நீங்கள் தலைப்புச் செய்தியாக மாற்றி விடுவீர்கள். ஆனால் ஒவ்வொரு கேப்டனுக்கும் ஒவ்வொரு வீரருக்கும் பலம், பலவீனம் என நிறைய இருக்கின்றது. நான் என்னுடைய முதல் டெஸ்ட் போட்டி ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்தபோதுதான் அறிமுகமானேன். முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியை கங்குலிக்கு கீழ் தான் விளையாடினேன்.
இதேபோன்று அணில் கும்ப்ளே, என்னுடைய கேப்டனாக இருந்தபோது என்னுடைய சிறந்த செயல்பாடுகளை நான் வெளிப்படுத்தி இருக்கின்றேன். ஆனால் என்னுடைய சிறந்த கிரிக்கெட் வாழ்க்கை என்பது தோனியின் கீழ் தான் இருந்தது. நான் தோனியின் தலைமைக்கு கீழ் தான் அதிகமாக விளையாடிருக்கின்றேன்.
அதேசமயம் தோனி உடன் விளையாடிய போது நான் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். தோனி நன்றாகவே அணியை வழி நடத்தினார் என்று கம்பீர் பாராட்டினார். இதேபோன்று சிறந்த அணி உரிமையாளராக கம்பீர் ஷாருக் கானை பாராட்டி இருக்கிறார். தோனியின் கேப்டன்சியை கம்பீர் புகழ்ந்து பேசி இருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.