சூர்யகுமாருக்காக வரிந்து கட்டிய கம்பீர்.. சைக்கிள் கேப்பில் கோலிக்கு ஒரு ஆப்பு.. ஏன் இந்த உள்குத்து?
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவுக்கு விரைவில் டெஸ்ட் அணியில் இடம் வழங்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 ஆட்டத்தில் சூரியகுமார் யாதவும் 112 ரன்கள் விளாசி அசத்தினார்.
இதன் மூலம் இந்திய அணி தொடரை வென்றது. இது குறித்து பேசிய கௌதம் கம்பீர் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்திய வீரர்கள் செயல்பட்ட விதம் பிரமிக்கும் வகையில் இருந்ததாக பாராட்டினார்.இது குறித்து பேசிய கம்பீர் இனி இந்திய அணியின் உள்ள வீரர்களை இளம் வீரர்கள் என்று குறிப்பிடாதீர்கள்.
ஏனென்றால் அவர்களுக்கு நிறைய அனுபவம் கிடைத்துவிட்டது. ஐபிஎல் போட்டிகளில் விளையாடி டி20யில் எந்த சூழ்நிலையில் எப்படி செயல்பட வேண்டும் என அனைவருக்கும் தெரிந்து விட்டது. சூரியகுமார் யாதவ் இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினார்.

ராகுல் திரிபாதிக்கு பாராட்டு
ஆனால் ராகுல் திருபாதியை யாரும் மறந்து விடாதீர்கள். பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது அவர்தான் அடித்து ஆட வேண்டும் என உத்வேகத்தில் விளையாடினார். இந்திய அணி நெருக்கடியில் இருந்த போது அவருடைய ஆட்டத்தால் தான் இந்தியா மீண்டது. ராகுல் திருபாதி கொடுத்த நம்பிக்கையின் மேல் தான் சூரியகுமார் யாதவும் சிறப்பாக ஆடினார். நான் சூரிய குமார் யாதவை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை.தற்போது சூரியகுமார் யாதவ் இதோடு நிறுத்தி விடக்கூடாது. டி20 கிரிக்கெட்டில் விளையாடிய ஆட்டத்தை அவர் ஒரு நாள் கிரிக்கெட்டிலும் காட்ட வேண்டும்.

டெஸ்டில் வாய்ப்பு
டி 20 போட்டியில் ஏற்படுத்திய தாக்கத்தை அவர் ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை ஏற்படுத்தவில்லை. இதனால் அந்த பார்மை அப்படியே ஒரு நாள் கிரிக்கெட்டிலும் விளையாடுங்கள். ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவர் ரன்கள் சேர்த்து அசத்தினால், அடுத்ததாக நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சூரிய குமாரியாதவ் விளையாட வேண்டும். ஒரு வீரருக்கு மிகவும் பெருமையான விஷயம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது தான். என்னைக் கேட்டால் சூரியகுமார் யாதவ் இப்போதே அதற்கு தகுதியாகிவிட்டார்.

பேட்டிங் வரிசையில் இடம்
தொடர்ந்து ஒன்றரை ஆண்டாக சூரியகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி வருகிறார். அதற்கு பரிசளிக்கும் விதமாக அவருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கொடுங்கள். இதேபோன்று டி20, ஒருநாள் கிரிக்கெட்டிலும் சூரிய குமார் நம்பர் 3வது வீரராக களம் இறக்குங்கள். பவர் பிளேவில் முடிந்த பிறகு சூரிய குமாரியாதவ் டி20 கிரிக்கெட்டில் சதம் அடிக்கிறார் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

கோலிக்கு ஆப்பு?
இதனால் அவர் மூன்றாவது வீரராக பேட்டிங் வரிசையில் களமிறங்க வேண்டும்.குறைந்தது அவர் 60 பந்துகளை டி20 கிரிக்கெட்டில் பிடிக்க வேண்டும். அப்போதுதான் அவருடைய தாக்கம் மிகப்பெரியதாக இருக்கும். இனி சூரியகுமார் யாதவ் தான் மூன்றாவது வீரராக களம் இறங்க வேண்டும். ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவருக்கு அந்த இடத்தை வழங்குவது சரியாக இருக்கும் என்று கோலிக்கு ஆப்பு வைக்கும் வகையில் கம்பீர் கூறினார்.


Click it and Unblock the Notifications