Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முக்கிய நபரின் வருகையால் இந்திய அணி இனி வேற லெவல் தான் கம்பீரின் அடுத்த கருத்து.. ரசிகர்கள் உற்சாகம்

மும்பை: முக்கிய நபர் ஒருவரின் வருகையால் இந்திய அணி வேற லெவலுக்கு செல்லப்போகிறது என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவடைந்தது.

அவருக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டை தலைமை பயிற்சியாளராக பிசிசிஐ நியமித்துள்ளது.

 புது பயிற்சியாளர்

புது பயிற்சியாளர்

புதிய பயிற்சியாளர் டிராவிட் மற்றும் புதிய கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நேற்று நியூசிலாந்துடன் முதல் டி20 போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அசத்தியது. டி20 உலகக்கோப்பை தொடரின் போது டாப் ஆர்டர் மற்றும் பவுலிங் சொதப்பலாக இருந்தது. ஆனால் அந்த இரண்டையுமே சரி செய்து நேற்றைய போட்டியில் இந்திய வீரர்கள் கெத்து காட்டினர். இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது ராகுல் டிராவிட் தான் என ரசிகர்கள் புகழந்து வருகின்றனர்.

கம்பீர் கருத்து

கம்பீர் கருத்து

இந்நிலையில் டிராவிட்டின் வருகை குறித்து கவுதம் கம்பீர் பேசியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், இந்திய அணி இனி வருங்காலத்தில் நிச்சயம் உயரிய இடத்திற்கு செல்லும். இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் அணிக்குள் வந்துள்ளதால் வீரர்களுக்கு நிச்சயம் தன்னம்பிக்கை பிறக்கும். மிகவும் வெற்றிகரமான பயிற்சியாளராக டிராவிட் மாறுவார்.

அடுத்த லெவல்

அடுத்த லெவல்

ராகுல் டிராவிட் ஏற்கனவே இந்திய அணியின் வீரராகவும், ஒரு கேப்டனாகவும் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து தற்போது பயிற்சியாளராகவும் தனது திறமையை அவர் நிரூபிப்பார் என்று நம்புகிறேன். ஒரு பயிற்சியாளராக அவர் இந்திய அணியை அடுத்த இடத்திற்கு அழைத்துச் செல்லும் நபராக திகழ்வார்.

புகழாரம்

புகழாரம்

ஒரு கேப்டனாகவும், ஒரு வீரராகவும் விளையாடிய காலங்களில் சிறப்பான பங்களிப்பை ராகுல் டிராவிட் செய்துள்ளார். நிச்சயம் அவர் தற்போது இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் இருப்பது வீரர்களுக்கு ஒரு புது நம்பிக்கையை கொடுக்கும். இதுமட்டுமல்லாமல் அவர் விரைவில் இந்திய அணியை சிறந்த அணியாக மாற்றுவார் என கவுதம் கம்பீர் புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, November 19, 2021, 1:04 [IST]
Other articles published on Nov 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+