கம்பீருக்கு இப்படி ஒரு முகமா? கோலிக்காக அவசரப்பட்ட ரசிகர்கள்.. முன்னாள் கிரிக்கெட் வீரர் நெகிழ்ச்சி
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருந்தவர் கம்பீர். இந்தியாவுக்காக இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி இரண்டு உலக கோப்பையை வென்று தந்திருக்கிறார் .
ஆனால் எப்போதும் மனதில் பட்டதை அப்படியே சொல்லி ரசிகர்களிடம் பல விமர்சனத்தை பெற்றிருக்கிறார். மேலும் களத்தில் கொஞ்சம் கோபமாகவும் நடந்து கொள்வார்.

எந்தெந்த வீரர்கள் எல்லாம் பிரபலமாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு எதிராக கருத்து சொல்லி வெறுப்பை சந்தித்து வருகிறார். தற்போது டெல்லி பாஜக எம்பியாக செயல்பட்டு வரும் கம்பீர் நிறைய நலத்திட்ட உதவிகளையும் சத்தம் இல்லாமல் செய்து வருகிறார். தன்னுடைய நலத்திட்ட உதவிகளுக்காக தான் ஐபிஎல் போன்ற தொடர்களில் மென்டராக பங்கேற்பதாகவும் பல கிரிக்கெட் ஷோ வில் போய் பேசுவதாகவும் கம்பீர் கூறி இருக்கிறார்.
இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் ஷர்மாவுக்கு கம்பீர் செய்துள்ள உதவி தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து ராகுல் ஷர்மா வெளியிட்டுள்ள பதிவில், கடந்த மாதம் எங்கள் குடும்பத்திற்கு மிகவும் சோதனை காலம் ஆக இருந்தது. என்னுடைய மனைவியின் தாய்க்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் எனக்கு கௌதம் கம்பீர் தான் தக்க சமயத்தில் உதவி செய்தார். இது குறித்து விவரத்தை கேட்டு அறிந்த அவர், சிறந்த நரம்பியல் நிபுணரை அழைத்து என் மாமியாருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். இதேபோன்று சிறந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ள எனக்கு உதவி செய்தார். இந்த உதவியால் தற்போது என்னுடைய மாமியார் உடல் நலம் தேறி வருகிறார்கள் என்று ராகுல் ஷர்மா கூறினார். கம்பீர் செய்த இந்த உதவி தற்போது ரசிகர்களிடையே நிகழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications