Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

30 நிமிடத்திற்கு முன்பே கணித்த கம்பீர்.. சொன்ன மாதிரியே சரியாக நடந்துச்சி.. சான்சே இல்லாத முதல் ஓவர்

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி குறித்து ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே கம்பீர் கணித்த படியே நடைபெற்றது.

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசியது.

இதனையடுத்து கடந்த 4 போட்டிகளாக டாஸ் வென்று சேஸிங் செய்த இலங்கை கேப்டன் ஷனாகா முக்கிய ஆட்டத்தில் டாஸை இழந்தார்.

கம்பீர் கருத்து

கம்பீர் கருத்து

டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த அணியே இந்த மைதானத்தில் பெரும்பான்மையான போட்டியில் வென்றது.இது குறித்து பேசிய கவுதம் கம்பீர், இலங்கை கேப்டன் ஷனாகா கடந்த போட்டியில் பெரிய தவறை செய்தததாக குறிப்பிட்டார். கடந்த ஆட்டத்தில், இலங்கைக்கு பேட்டிங் செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது.

கை கொடுத்திருக்கும்

கை கொடுத்திருக்கும்

ஆனால், ஷனாகா அதனை வீணடித்துவிட்டு பந்துவீச்சை தேர்வு செய்தார். அன்றைய ஆட்டத்தில் இலங்கை முதலில் பேட் செய்து இருந்தால், எந்த நெருக்கடியும் இன்றி விளையாடி அனுபவத்தை பெற்று இருக்கலாம். அது இறுதிப் போட்டிக்கு இலங்கை வீரர்களுக்கு கைக் கொடுத்து இருக்கும்.

பாகிஸ்தானுக்கு சாதகம்

பாகிஸ்தானுக்கு சாதகம்

இதனால், இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்கள் கையே ஓங்கி இருக்கும். இலங்கை வீரர்கள் பயமின்றி விளையாடினால் மட்டுமே ஜெய்க்க முடியும். இல்லையேனில் பாகிஸ்தான் தான் வெல்லும் என்று குறிப்பிட்டார். கம்பீர் குறிப்பிட்டது போலவே ஆட்டத்தின் முதல் ஓவரை நஷிம் ஷா ஆக்கோரஷமாக பந்துவீசினார். இதனால் முதலில் இலங்கை வீரர்கள் தடுமாறினர்.

நஷிம் ஷா அசத்தல்

நஷிம் ஷா அசத்தல்

ஆட்டத்தின் 3வது பந்தில் நஷிம் ஷா வீசிய பந்து, இன் ஸ்விங் ஆகி குசேல் மெண்டிசின் ஸ்டம்பை பதம் பார்த்தது. இதன் மூலம் இலங்கை 2 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்தது. நடப்பு ஆசிய கோப்பை தொடரில் நஷிம் ஷா முதல் ஓவரில் கேஎல் ராகுல், முகமது நபி, குசேல் மெண்டிஸ் ஆகியோரை டக் அவுட்டாகி அசத்தி இருக்கிறார்.

Story first published: Sunday, September 11, 2022, 20:04 [IST]
Other articles published on Sep 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+