Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கம்பீர் பயிற்சியாளர் குழுவில் குழப்பம்.. பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஐபிஎல் அணிக்கு தாவும் நபர்

மும்பை: இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் இந்திய அணி படுதோல்வி அடைந்து கடும் விமர்சனங்களைச் சந்தித்து வரும் நிலையில், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் பயிற்சியாளர் குழுவில் அதிரடி மாற்றங்கள் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணியின் முக்கிய பயிற்சியாளர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பிரபல ஐபிஎல் அணியில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Gautam Gambhir coaching staff set for reset as senior member looks to exit for IPL franchise

பிசிசிஐ உடன் 2 ஆண்டுகள் + 1 ஆண்டு நீட்டிப்பு என்ற ஒப்பந்த அடிப்படையில் கம்பீரின் குழுவில் இணைந்த இவரின் 2 ஆண்டுகால ஒப்பந்தம் முடிவடையும் நிலையில், உலகளவில் பல லீக்-களில் அணிகளை வைத்திருக்கும் ஒரு ஐபிஎல் அணியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

குறிப்பாக, சமீபகாலமாக இந்திய வீரர்களின் மோசமான ஃபீல்டிங் தரம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளதால், ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஐபிஎல் அணியில் இணைய வாய்ப்புள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.

கௌதம் கம்பீருடன் இணைந்து ரியான் டென் டோஸ்கேட், மோர்னே மோர்கல் மற்றும் அபிஷேக் நாயர் ஆகியோர் 2024 ஜூலை மாதம் பயிற்சியாளர் குழுவில் இணைந்தனர். இதில் அபிஷேக் நாயர் ஏற்கனவே 2025ஆம் ஆண்டு அணியில் இருந்து விலகினார். கம்பீர் மற்றும் மோர்கல் கூட்டணியின் கீழ் இந்திய அணி 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2026 டி20 உலகக் கோப்பைகளை வென்று சாதனை படைத்தது.

ஆனால், சமீபத்தில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிராகத் தொடர்ச்சியாக 5 டி20 போட்டிகளில் இந்திய அணி தோற்றுத் தொடரை இழந்தது, பயிற்சியாளர் குழுவின் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது. 2027ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடங்க இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில், பயிற்சியாளர் குழுவில் ஏற்படும் இந்த திடீர் மாற்றம் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்து நடைபெற உள்ள ஜிம்பாப்வே டி20 தொடர் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடர்களில் தற்காலிக அடிப்படையில் விவிஎஸ் லட்சுமண் தலைமையிலான வேறு பயிற்சியாளர் குழு இந்திய அணியை வழிநடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில் கம்பீரின் பயிற்சியாளர் குழுவில் மாற்றம் நடக்கப் போவது கம்பீர் மீதான நம்பிக்கையை பிசிசிஐ இழந்து வருகிறதா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

Story first published: Sunday, July 12, 2026, 13:05 [IST]
Other articles published on Jul 12, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+