Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டன் கோலியை, கம்பீர் கழுவி ஊத்தியதில் என்ன தப்பு இருக்கு.. நீங்களே சொல்லுங்க!!

Recommended Video

ஐபிஎல் வெற்றி குறித்து கோஹ்லி மீது கம்பீர் கடும் விமர்சனம்!!

மும்பை : சமீபத்தில் விராட் கோலியின் கேப்டன்சி குறித்து கடும் விமர்சனங்களை முன் வைத்தார் கௌதம் கம்பீர்.

ஐபிஎல் அணியான ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, பெரிதாக எந்த சாதனையும் செய்யவில்லை. ஒரு சாதாரண கேப்டன் தான் என்ற தொனியில் பேசி இருந்தார் கம்பீர்.

பழைய பஞ்சாயத்து

பழைய பஞ்சாயத்து

இதை கோலியின் ரசிகர்கள் பலர் எதிர்த்து கருத்து கூறியும், கம்பீரை திட்டியும் வருகின்றனர். சிலர் கோலி - கம்பீர் இடையே சில வருடங்கள் முன்பு ஐபிஎல் தொடரில் வெடித்த சண்டை தான் கம்பீர் இப்படி பேசக் காரணம் எனவும், பழைய பஞ்சாயத்துக்களை மனதில் வைத்து தான் கம்பீர் இப்படி பேசுகிறார் எனவும் சிலர் கூறி வருகின்றனர்.

எந்த தவறும் இல்லை

எந்த தவறும் இல்லை

ஆனால், கௌதம் கம்பீர் கூறிய கருத்துக்களில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை என்பதே உண்மை. கம்பீர் கூறியது இது தான். "விராட் கோலி நீண்ட காலமாக பெங்களூர் அணியின் கேப்டனாக இருக்கிறார். ஆனால், இது வரை ஒரு ,முறை கூட கோப்பை வெல்லவில்லை. தொடரை வெல்லாத எந்த கேப்டனுக்கும் தொடர் வாய்ப்புக்கள் அளிக்கப்பட்டதில்லை."

ஒப்பிடக் கூடாது

ஒப்பிடக் கூடாது

"ஆனால், 7-8 ஆண்டுகளாக பெங்களூர் அணியின் கேப்டனாக இருந்தும், ஒரு முறை கூட ஐபிஎல் தொடரை வெல்லாத விராட் கோலியை - மூன்று முறை வென்ற தோனி, ரோஹித் சர்மா ஆகியோருடன் ஒப்பிடக் கூடாது" என்று கூறி இருந்தார்.

இரண்டு பிளே-ஆஃப்

இரண்டு பிளே-ஆஃப்

கோலி இதுவரை இரண்டு முறை ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் வரை பெங்களூர் அணியை அழைத்துச் சென்றுள்ளார். அது மட்டுமே அவரது சிறப்பான ஐபிஎல் கேப்டன்சி என கூறலாம். 96 ஐபிஎல் போட்டிகளில் 44 வெற்றிகள் பெற்றுக் கொடுத்துள்ளார்.

தொடர் தோல்வி

தொடர் தோல்வி

கடந்த இரு ஆண்டுகளாக சிறந்த அணியை பெற்றும், ஏபி டி வில்லியர்ஸ் உள்ளிட்ட தலைசிறந்த அதிரடி பேட்ஸ்மேன் அணியில் இருந்தும், பெங்களூர் அணி பிளே-ஆஃப் செல்லவில்லை. மேலும், பல போட்டிகளில் தோல்வி அடைந்தும் இருக்கிறது.

தோனி நிலை

தோனி நிலை

சிறந்த கேப்டன் என பெயர் எடுத்த தோனி, புனே சூப்பர் ஜெயன்ட் அணியை அதன் முதல் சீசனில் பிளே-ஆஃப் அழைத்துச் செல்லவில்லை என்பதால், அடுத்த சீசனில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் சிஎஸ்கே அணி தடையில் இருந்து மீண்டு வந்த போது அந்த அணிக்கு கேப்டனாகி கோப்பை வென்றார் தோனி.

தோல்விக்கு பின்னும் கேப்டன்!

தோல்விக்கு பின்னும் கேப்டன்!

இந்த நிலையில், தொடர்ந்து இரண்டு தொடர்களில் சொதப்பியும் பெங்களூர் அணி நிர்வாகம் கோலியை கேப்டனாக வைத்திருக்கிறது என்பதையே கம்பீர் சுட்டிக் காட்டியுள்ளார். கம்பீர் கொல்கத்தா அணிக்கு இரண்டு முறை கோப்பை வென்று கொடுத்தும், பின்னர் தோல்விகளால் அந்த அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன்சி சரியில்லை

கேப்டன்சி சரியில்லை

கோலி இந்திய அணிக்கு கேப்டன்சி செய்யும் முறையையும் பல முன்னாள் வீரர்கள் குறை கூறி இருக்கிறார்கள். அவரது அணித் தேர்வு, பீல்டிங் நிறுத்தும் முறை, பந்துவீச்சாளர்கள் சுழற்சி, டிஆர்எஸ் கேட்பதில் சொதப்பல் என பல குறைகளை சுட்டிக் காட்டியுள்ளனர். ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டாவது பெங்களூர் அணி பிளே-ஆஃப் செல்லவில்லை என்றால், கம்பீர் ஐபிஎல் தொடருக்காக கேட்கும் கேள்விகளை உலகக்கோப்பை தொடருக்காக கேட்பார்!! கோலி உஷாராக இருந்து கொள்வது நல்லது.

Story first published: Wednesday, March 20, 2019, 14:09 [IST]
Other articles published on Mar 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+