Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வசமாக பொய் சொல்லி சிக்கிய கம்பீர்.. அரசியல்வாதி ஆயிட்டாரே.. நாட்டுக்கு எதிராக குரல் கொடுத்தார்களா?

கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் கிரிக்கெட் வர்ணனையாளராக பணிபுரிந்து வரும் முன்னாள் வீரர் மற்றும் டெல்லி பாஜக எம்.பி.கௌதம் கம்பீர் தற்போது மிகப்பெரிய சர்ச்சை ஒன்றில் சிக்கி இருக்கிறார்.

கம்பிருக்கும் விராட் கோலிக்கும் உள்ள பிரச்சினை ஊருக்கே தெரியும். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணியும்,ஆர் சி பி அணியும் மோதிக்கொண்டிருந்த போது கோலிக்கும் கம்பிருக்கும் பிரச்சினை ஏற்பட்டது.

Gautam gambhir controversy in asia cup - Fact check proves his claim was untrue

இதனை அடுத்து கம்பீர் செல்லும் இடமெல்லாம் கோலி கோலி என ரசிகர்கள் கத்தி வருகிறார்கள்.இது கம்பீரை எரிச்சல் அடைய செய்திருக்கிறது. ஏற்கனவே ஸ்டார் வீரர்களை ரசிகர்கள் கொண்டாடுவது கம்பிருக்கு பிடிக்காது. தோனி விராட் கோலி ஆகியவர்களை அவர் ஏற்கனவே மறைமுகமாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்பீர் பார்வையாளர் அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்து சிலர் கோலி கோலி என கத்தியதாகவும் அதற்கு கம்பீர் தன்னுடைய நடுவிரலை உயர்த்திக் காட்டியதாகவும் வீடியோ உலா வந்தது.

இதற்கு கம்பீர் மீது கடும் கண்டனம் எழுந்தது. நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கம்பீர் இதுபோன்ற அநாகரிக செயலில் ஈடுபடலாமா? மேலும் விராட் கோலியை புகழ்ந்து பேசினால் உங்களுக்கு ஏன் எரிச்சல் வருகிறது என்றும் பலரும் கேள்வி எழுப்பினர். இதற்கு விளக்கம் அளித்த கம்பீர் சமூக வலைத்தளத்தில் வருவது எதுவும் உண்மை இல்லை.தான் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் இந்தியாவை விமர்சிக்கும் வகையில் பல கருத்துக்களை தெரிவித்ததாகவும் அதற்கு தான் தாம் கோபப்பட்டேன் என்றும் கம்பீர் கூறினார்.

கம்பீர் விளக்கத்திற்கு பிறகு அவர் சொன்னது போல் வீடியோவும் ஒன்று வந்தது. இந்த நிலையில் அந்த வீடியோவை ஆராய்ந்து பார்த்ததில் இந்தியாவுக்கு எதிராக முழக்கங்கள் இருந்தது எடிட் செய்யப்பட்ட போலி வீடியோ என தற்போது தெரிய வந்திருக்கிறது. மேலும் கம்பீர் கோபப்பட்ட போது விராட் கோலி விராட் கோலி என கத்திய வீடியோவில் எந்த எடிட்டிங்கும் செய்யப்படவில்லை என்றும் அந்த வீடியோ எடுக்கப்பட்ட போது பத்திரிக்கையாளர் ஒருவர் அங்கு இருந்ததாகவும் அவர் இந்த காட்சியை நேரில் பார்த்ததாகவும் தற்போது விளக்கம் அளித்து இருக்கிறார். இதன் மூலம் கம்பீர், கோலி பெயரை கேட்டு தான் கடுப்பாகி நடுவிரலை காட்டியதும் பின் தாம் மாட்டிக்கொண்டோம் என்று தெரிந்த பிறகு நாட்டை விமர்சித்தார்கள் என்று பொய் சொன்னதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Story first published: Wednesday, September 6, 2023, 18:00 [IST]
Other articles published on Sep 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+