Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ரேங்க் முக்கியமே இல்லை.. என் வேலை..”.. இந்திய டெஸ்ட் அணி பற்றி பயிற்சியாளர் கம்பீர் ஆவேசம்

கொழும்பு: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி 5 வது இடத்தில் இருக்கும் நிலையில், டெஸ்ட் போட்டிகளில் அணி தடுமாறவில்லை என்று தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியல் தமக்கு முக்கியமல்ல என்றும், கடந்த ஆண்டு முதல் இந்திய அணி ஓரளவுக்குச் சிறப்பான கிரிக்கெட்டையே விளையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய அணி விளையாடியுள்ள 10 போட்டிகளில் 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக கம்பீரின் பயிற்சி காலத்தின் கீழ், 2025 இல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 2-0 என்ற கணக்கிலும், 2024 இல் நியூசிலாந்திற்கு எதிராக 3-0 என்ற கணக்கிலும் இந்திய அணி சொந்த மண்ணில் தொடரை இழந்து படுதோல்வி அடைந்தது. இதனால் கம்பீர் மீது பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

Gautam Gambhir Defends India s Test Record Dismisses WTC Rankings as Transition Period

சனிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த கௌதம் கம்பீர், "விமர்சனங்களா? கோப்பைகளை வெல்வது மட்டுமே எனது வேலை. அதை மட்டுமே நான் நம்புகிறேன். மற்ற கருத்துக்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. தரவரிசைப் பட்டியல் முக்கியமல்ல. நாம் தடுமாறவில்லை. தற்போது அணி ஒரு மாற்றத்திற்கான காலகட்டத்தைக் கடந்து வருகிறது" என்றார்.

இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்டனர். மேலும் செதேஸ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே போன்ற மூத்த வீரர்கள் ஆண்டுகளுக்கு முன்பே வெளியேற்றப்பட்டு அவர்களும் ஓய்வு பெற்று விட்டனர். இதனால் சுப்மன் கில் தலைமையில் புதிய வீரர்களைக் கொண்டு அணியை கட்டமைக்கும் பணியில் கம்பீர் ஈடுபட்டு வருகிறார்.

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற வேண்டுமானால், மீதமுள்ள 8 போட்டிகளில் குறைந்தது 7 போட்டிகளில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். கம்பீரின் கீழ் இந்திய அணி 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2026 டி20 உலகக் கோப்பையை வென்றிருந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் அதன் செயல்பாடு விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. இதனால் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு தனித்தனி பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன.

“எல்லை மீறிப் போறீங்க”.. வங்கதேச வீரர்களை வம்பிழுத்த ஸ்டீவ் ஸ்மித்.. அம்பயர்கள் எச்சரிக்கை

“எல்லை மீறிப் போறீங்க”.. வங்கதேச வீரர்களை வம்பிழுத்த ஸ்டீவ் ஸ்மித்.. அம்பயர்கள் எச்சரிக்கை

இதற்கிடையில் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி பெற்ற வெற்றி கம்பீருக்கு சற்றே நிம்மதியை அளித்துள்ளது. அடுத்து நடைபெற உள்ள நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்கள்தான் கம்பீரின் பயிற்சி திறமைக்கு உண்மையான சவாலாக அமையும்.

AUS vs BAN: ஆஸ்திரேலியா 165க்கு 8 விக்கெட் காலி.. பவுலிங்கில் கலக்கிய வங்கதேச வீரர் ஷோரிபுல் இஸ்லாம்

Also Read

AUS vs BAN: ஆஸ்திரேலியா 165க்கு 8 விக்கெட் காலி.. பவுலிங்கில் கலக்கிய வங்கதேச வீரர் ஷோரிபுல் இஸ்லாம்
Story first published: Saturday, August 22, 2026, 16:34 [IST]
Other articles published on Aug 22, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+