“விராட் கோலி அதை புரிஞ்சிக்கனும்”.. 1020 நாட்கள் கழித்து முதல் சதம்.. கவுதம் கம்பீர் முக்கிய அட்வைஸ்!
துபாய்: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் எந்தவொரு கிரிக்கெட் வீரருக்கும் கிடைத்திராத வாய்ப்பு விராட் கோலிக்கு கிடைத்துள்ளதாக கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
ஆசிய கோப்பை தொடரில் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்த இந்திய அணி இறுதிப்போட்டிக்கு செல்லாமல் வெளியேறியது.
சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியுடனான போட்டியில் தோல்வியடைந்து வெளியேறியது.

கோலியின் சதம்
இந்திய அணி தோற்ற போதும், ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்த ஒரு விஷயம், விராட் கோலியின் கம்பேக் தான். மொத்தமாக 61 பந்துகளை சந்தித்த அவர் 12 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 122 ரன்களை விளாசினார். 1020 நாட்களுக்கு பிறகு கோலி அடிக்கும் முதல் சதம் இதுவாகும். சர்வதேச கிரிக்கெட்டில் அவரின் 71வது சதமாகும்.

கம்பீர் முக்கிய கருத்து
விராட் கோலியின் சதம் குறித்து ரசிகர்கள் பாராட்டி வரும் நிலையில் கவுதம் கம்பீர் முக்கிய கருத்தை கூறியுள்ளார். விராட் கோலி ஒரு விஷயத்தை உணர வேண்டும். இது வெறும் 3 மாதங்கள் அல்ல, 3 வருடங்கள் ஆகும். விராட் கோலி கடந்த காலங்களில் அடித்த ரன்களுக்காக மட்டுமே இத்தனை நாட்களாக வாய்ப்பு பெற்றார்.

இனி என்ன செய்யவேண்டும்
சர்வதேச கிரிக்கெட்டில் இத்தனை நாட்களாக ஒரு சதம் கூட அடிக்காமல், எந்தவொரு இந்திய வீரரும் அணியில் இடம்பெற்றிருக்க மாட்டார். ஆனால் கோலி வாய்ப்பு பெற்றுள்ளார். உண்மையை கூற வேண்டும் என்றால் தாக்குப்பிடித்துள்ளார். இதனை புரிந்துக்கொண்டு விராட் கோலி இனி செயல்படுவார் என நினைக்கிறேன் என கம்பீர் கூறியுள்ளார்.

கொண்டாடும் ரசிகர்கள்
நீண்ட ஓய்வில் இருந்த விராட் கோலி, இந்த ஒரு சதத்துடன் மட்டும் நிறுத்திக்கொள்ளவில்லை. ஆசிய கோப்பையில் 5 இன்னிங்ஸ்களில் விளையாடி 276 ரன்களை குவித்துள்ளார். இதில் 2 அரைசதங்களும் ஒரு சதமும் அடங்கும். இதனால் இனி அவரை யாராலும் தடுக்க முடியாது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications