Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பயிற்சி டெஸ்ட்டில் ஒரே ஓவரில் 4 சிக்சர்.. உடனே எழுந்த கம்பீர்.. 200 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிய பிரார்

கொழும்பு: இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 நாள் பயிற்சி போட்டியில் விளையாடி வருகிறது. கொழும்பில் நடந்து வரும் இந்தப் போட்டியின் 2வது நாளில், இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிரார் பேட்டிங்கில் அதிரடி காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் லெவன் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் 11வது வீரராக களம் இறங்கிய பிரார், 18 பந்துகளில் 36 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் 2 பவுண்டரிகளும், 4 பிரம்மாண்ட சிக்சர்களும் அடங்கும். மற்றொரு முனையில் சதமடித்து கடைசி வரை களத்தில் இருந்த தேவ்தத் படிக்கல்லுடன் இணைந்து கூட்டணியாக 30 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார் பிரார்.

Gautam Gambhir gives standing ovation to Gurnoor Brar as he hits 4 sixes in an over in Sri Lanka Warm-Up Match
Photo Credit: Screenshot

குறிப்பாக, ஆட்டத்தின் 90வது ஓவரை இலங்கை சுழற்பந்து வீச்சாளர் திலும் சுதீரா வீசினார். அந்த ஓவரின் 2, 3, 5 மற்றும் 6வது பந்துகளை பிரார் வரிசையாக சிக்சருக்கு பறக்கவிட்டார். ஒரே ஓவரில் 4 சிக்சர்களை விளாசி, இந்திய அணியின் ஸ்கோரை 350 ரன்களுக்கு மேல் உயர்த்தினார்.

பிராரின் இந்த அதிரடி ஆட்டத்தைக் கண்டு பெவிலியனில் இருந்த இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், சிரிப்புடன் எழுந்து நின்று உற்சாகமாக கைதட்டி தனது பாராட்டினார்.

கடந்த 2026 ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சர்வதேச போட்டிகளில் அறிமுகமான பிரார், இதுவரை 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆகஸ்ட் 15 அன்று காலே மைதானத்தில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பெற இவர் தீவிர முயற்சியில் உள்ளார்.

பயிற்சிப் போட்டியில் செஞ்சுரி.. இந்திய டெஸ்ட் பிளேயிங் 11இல் இடம் பிடித்த தேவ்தத் படிக்கல்

பயிற்சிப் போட்டியில் செஞ்சுரி.. இந்திய டெஸ்ட் பிளேயிங் 11இல் இடம் பிடித்த தேவ்தத் படிக்கல்

ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நிலையில், முகமது சிராஜுடன் இணைந்து விளையாடும் 2வது வேகப்பந்து வீச்சாளர் இடத்திற்கு பிரார், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஆகிப் நபி ஆகிய மூவரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் பஞ்சாப் வீரரான குர்னூர் பிராரின் இந்த சிறப்பான பேட்டிங் திறமை, அவருக்கு முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் 11-இல் வாய்ப்பைப் பெற்றுத் தருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புவனேஷ்வர் குமார் 2027 உலகக்கோப்பை ஆடுவதில் உள்ள பிரச்சனையே இதுதான்.. உண்மையை உடைத்த ஆகாஷ் சோப்ரா

Also Read

புவனேஷ்வர் குமார் 2027 உலகக்கோப்பை ஆடுவதில் உள்ள பிரச்சனையே இதுதான்.. உண்மையை உடைத்த ஆகாஷ் சோப்ரா
Story first published: Sunday, August 9, 2026, 7:56 [IST]
Other articles published on Aug 9, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+