Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முகமது ஷமிக்கு என்ன தான் ஆச்சு.. எப்போது இந்திய அணிக்கு திரும்புவார்.. கம்பீர் கொடுத்த அப்டேட்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தற்போது காயம் காரணமாக 8 மாதங்களாக எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருக்கின்றார். 34 வயதை நெருங்கும் முகமது ஷமி கடைசியாக 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதன் மூலம் 2023 உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையும் முகமது ஷமிக்கு கிடைத்தது. எனினும் அதன் பிறகு காயம் காரணமாக ஷமி எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. ஐபிஎல் தொடர்கள் கூட விளையாட முடியாத நிலை ஷமிக்கு ஏற்பட்டது.

ind vs sl india squad cricket vs mohammed shami

இந்த நிலையில் ஷமி தற்போது முழு உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். தனது காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஷமி எப்போதுதான் இந்திய அணிக்கு வருவார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்திய அணி தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருப்பதால் ஷமியின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் ஷமி குறித்து புதிய பயிற்சியாளர் கம்பீர் அப்டேட் கொடுத்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர், ஷமி தற்போது தான் பந்து வீசத் தொடங்கி இருக்கிறார். தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவர் தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறார். இந்திய அணி வரும் செப்டம்பர் 19ஆம் தேதி தான் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது.

இதற்கு இன்னும் பல நாட்கள் இருக்கிறது. எனவே அதற்குள் ஷமி முழு உடல் தகுதியை எட்டி பந்து வீச வேண்டும் என்பதே முதல் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்குள் ஷமி உடல் தகுதியை எட்டி விடுவாரா என்பது அப்போதுதான் தெரிய வரும். இது குறித்து நான் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள நிபுணர்களை கேட்டிருக்கிறேன் என்று கம்பீர் கூறியுள்ளார்.

இந்திய அணி செப்டம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டியும், அக்டோபர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட இருக்கின்றது. இதுபோன்று நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

அங்கு ஐந்து டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாட இருக்கிறது. இந்த 10 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 7-ல் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு மூன்றாவது முறையாக செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் முகமது ஷமியின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Story first published: Monday, July 22, 2024, 15:30 [IST]
Other articles published on Jul 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+