Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியில் பெரிய குறை இன்னும் இருக்கு.. அரையிறுதியில் ஆபத்தை தரலாம்.. கவுதம் கம்பீர் எச்சரிக்கை

மெல்போர்ன் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை நாளை எதிர்கொள்கிறது.

இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரை இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற முடியும். பாகிஸ்தான அணி வங்கதேசத்திடம் தோல்வியை தழுவும் பட்சத்தில்,

இந்தியா நாளை ஜிம்பாப்வே உடன் வீழ்ந்தாலும் அரை இறுதி சுற்றுக்கு செல்ல முடியும். இதனால் இந்திய அணி ரசிகர்கள் தற்போது அரையிறுதி சுற்று குறித்து கனவு காண தொடங்கிவிட்டனர்.

பெரிய குறை

பெரிய குறை

இந்த நிலையில் இந்திய அணியில் பெரிய குறை இருப்பதாக கவுதம் கம்பீர் எச்சரிக்கை கொடுத்துள்ளார். இது குறித்து பேசி அவர் இந்திய அணியில் ஒரு மிகப்பெரிய பிரச்சனை இருக்கிறது. அது சுழற் பந்து வீச்சு துறை தான். ஏனெனில் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் உங்களுக்கு விக்கெட்டுகளை எடுத்து தரவில்லை. அந்த ஒரு விஷயம் மட்டும் இந்தியாவுக்கு சிக்கலை கொடுக்கும்.

விக்கெட்டுகள் வீழ்த்தவில்லை

விக்கெட்டுகள் வீழ்த்தவில்லை

ஏனெனில் போட்டியின் நடு ஓவர்களில் சுழற்பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றால் அது உங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும். அதுவும் இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் நிச்சயம் சுழற் பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இந்திய அணியில் லேக் ஸ்பின்னர் இல்லாதது குறையாக இருக்கிறது.

சாஹலை பயன்படுத்துங்கள்

சாஹலை பயன்படுத்துங்கள்

இந்திய அணி, அஸ்வினுக்கு பதில் சாஹலை பயன்படுத்த வேண்டும். அஸ்வின் உங்களுடைய பேட்டிங்கை வலுப்படுத்துவார் என்ற காரணம் புரிகிறது. ஆனால் முன்வரிசை வீரர்கள் சரியாக விளையாடி ரன் சேர்த்தால் உங்களுக்கு அஸ்வினுடைய பேட்டிங் தேவையை இருக்காது. எனவே மெல்போர்ன் போன்ற மைதானத்தில் சாகலை வைத்து விளையாட வேண்டும்.

தவறில்லை

தவறில்லை

சிட்னி போன்ற மைதானத்திலும் சாகல் பந்துவீச்சு எடுபடும். இந்தத் தொடரில் லேக் ஸ்பின்னர்கள் அனைவரும் நன்றாகவே விளையாடி விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்கள். எனவே இந்தியாவும் அதனை பயன்படுத்துவதில் தவறில்லை என்று கம்பீர் கூறியுள்ளார். கம்பீரின் இந்த பேச்சு யோசிக்க வைத்தாலும் அஸ்வினை குறி வைத்து அவர் ஏன் இப்படி பேசுகிறார் என்று யோசிக்கவும் வைக்கிறது.

என்ன பிரச்சினை

என்ன பிரச்சினை

அஸ்வின் போன்ற ஒரு பேட்ஸ்மேன் கீழ் வரிசையில் இருப்பது நிச்சயம் இந்தியாவுக்கு சாதகமான விஷயம். அப்படி இருக்க அக்சர் பட்டேலுக்கு பதில் சாகலை சேர்க்கலாம் என்று சொல்லுவது தான் புத்திசாலித்தனம். இதனால் கம்பிருக்கு அஸ்வின் மீது ஏதேனும் மன வருத்தம் இருக்கிறதா என்று ரசிகர்களுக்கு நினைக்கத் தோன்றுகிறது.

Story first published: Saturday, November 5, 2022, 20:45 [IST]
Other articles published on Nov 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+