துபாய் : முன்னாள் இந்திய துவக்க வீரர் கவுதம் கம்பீரே கிரிக்கெட்டில் தனது ஹீரோ என்று ஆர்சிபி அணியின் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி அணிக்காக விளையாடிவரும் படிக்கல், இதுவரை 3 அரைசதங்களை அடித்து அணியின் சிறப்புக்கு காரணமாக உள்ளார்.

இந்நிலையில் ஆர்சிபி தளத்தில் பேசிய அவர், முன்னாள் துவக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீரை முன்னுதாரணமாக கொண்டே தான் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

ஆர்சிபி அணி இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் மூன்றில் வெற்றி கொண்டு 3வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் இளம்வீரர் தேவ்தத் படிக்கல் இதுவரை 3 அரைசதங்களை விளாசியுள்ளார். இந்நிலையில் ஆர்சிபியின் டிவிட்டர் தளத்தில் பேசியுள்ள படிக்கல், முன்னாள் துவக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீரே கிரிக்கெட்டில் தன்னுடைய ஹீரோ என்று தெரிவித்துள்ளார்.

கம்பீரின் ஆட்டத்தை தான் சிறுவயதிலிருந்து தொடர்ந்து பார்த்து வருவதாகவும் நெருக்கடி சூழல்களிலும் அவர் பந்தை சிறப்பாக கையாண்டு அடித்த முக்கிய ஷாட்கள் தனக்கு உத்வேகத்தை அளித்ததாகவும் அவர் மேலும் கூறினார்.