For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது என்ன டா ஆச்சரியம்.. தோனியை புகழ்ந்து தள்ளிய கம்பீர்.. சிறந்த கேப்டன் என பாராட்டு

மும்பை : டி20 உலக கோப்பையில் அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது.

இதன் மூலம் இந்தியா உலக கோப்பையை வெல்லும் என ரசிகர்களின் கனவு கானல் நீர் போல் கலைந்தது.

ஐந்து ஐபிஎல் கோப்பை வென்ற நாள் ரோகித் சர்மா பெரிய கேப்டன் என ரசிகர்கள் நம்பிய நிலையில் இந்த தோல்வி அவருடைய பிம்பத்தை சுக்குநூறாக்கி இருக்கிறது.

 தோனியின் புகழ்

தோனியின் புகழ்

இந்தியா தோல்வி அடைந்ததில் இருந்து தோனியின் புகழ் தான் சமூக வலைத்தளத்தை மொத்தமாக ஆக்கிரமித்து இருக்கிறது.பலரும் ஒரு ஐசிசி கோப்பையை வெல்லவே தற்போது முடியாமல் இந்திய அணி திணறுகிறது. தோனி எப்படி தான் மூன்று ஐசிசி கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார் என்று பாராட்டி வருகின்றனர்.

 ரசிகர்கள் பாராட்டு

ரசிகர்கள் பாராட்டு

இன்னும் சிலர் தோனி நமக்கு மூன்று ஐசிசி கோப்பையை வென்று தந்ததால் அவர் சென்ற பிறகும் ஐசிசி கோப்பையை வெல்வது எளிது என்று நாம் நினைத்துக் கொள்கிறோம். ஆனால் தோனி அதனை சுலபமாக்கினார். மற்ற வீரர்களுக்கு அது எட்டாக்கனியாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

வாய்ப்பு இருக்கு

வாய்ப்பு இருக்கு

இந்த நிலையில் தோனியை எப்போதும் விமர்சிக்கும் வகையிலும் மறைமுகமாக தாக்கும் வகையிலும் பேசி வரும் கம்பீரே இன்று தோனியை புகழ்ந்து பேசி இருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது . இது தொடர்பாக பேசிய அவர், எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு வீரர் அதிக முறை ரோகித் சர்மாவை விட இரட்டை சதம் அடிக்கலாம்.

தோனி சாதனை

தோனி சாதனை

அதிக முறை விராட் கோலியை விட சதங்கள் விளாசலாம். ஆனால் இனி எந்த ஒரு இந்திய கேப்டனும் தோனி செய்த மூன்று ஐசிசி கோப்பையை வென்ற சாதனையை முறியடிக்க முடியாது என்று நான் நினைக்கிறேன். இந்திய கிரிக்கெட்டில் தனி நபர் துதி பாடக் கூடாது என்று கம்பீர் பலமுறை பேசி இருக்கிறார். ஆனால் அப்படிப்பட்ட அவரையே தற்கால இந்திய வீரர்கள் தோனி குறித்து பாராட்ட வைத்து விட்டார்கள் என்று ரசிகர்கள் கூறியிருக்கின்றனர்.

Story first published: Friday, November 11, 2022, 10:32 [IST]
Other articles published on Nov 11, 2022
English summary
Gautam Gambhir Lauds MS Dhoni as no one can beat his record by winning 3 icc trophies இது என்ன டா ஆச்சரியம்.. தோனியை புகழ்ந்து தள்ளிய கம்பீர்.. சிறந்த கேப்டன் என பாராட்டு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+