Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை.. சூர்யகுமாரை பார்த்து வியந்த கவுதம் கம்பீர்.. புகழ்ச்சி வார்த்தைகள்!

அடிலெய்ட்: இந்திய அணியில் இதற்கு முன்பு சூர்யகுமார் யாதவ் போன்று ஒரு வீரரே இருந்ததில்லை என்றும் கோலி கூட நெருங்க மாட்டார் என்றும் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர் வெற்றிகளை பெற்று அரையிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளது. அரையிறுதிப்போட்டி வரும் நவம்பர் 10ம் தேதி அடிலெய்டில் நடைபெறவுள்ளது.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் அதிக கவனத்தை ஈர்த்திருப்பவர் சுர்யகுமார் யாதவ் தான். இக்கட்டான சூழல்களில் அவர் தான் காப்பாற்றி வருகிறார்.

சூர்யகுமார் யாதவ் அதிரடி

சூர்யகுமார் யாதவ் அதிரடி

லீக் சுற்றின் போது பல்வேறு போட்டிகளில் இந்திய அணியின் ஸ்கோர் குறைவாக இருந்த போதெல்லாம், மிடில் ஆர்டரில் இருந்து ஸ்கோரை உயர்த்திச் சென்றவர் சூர்யகுமார் யாதவ் தான். ஜிம்பாப்வே போட்டியில் கூட சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 61 ரன்களை விளாசினார். அவர் மட்டும் இல்லையென்றால் ஜிம்பாப்வேவுக்கு எதிராக 150 ரன்கள் கூட வந்திருக்குமா என்பது சந்தேகம் தான்.

கம்பீர் விளக்கம்

கம்பீர் விளக்கம்

இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் குறித்து கம்பீர் புகழ்ந்து தள்ளியுள்ளார். அதில், விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் போன்ற வீரர்கள் பாரம்பரிய முறையில் ஆடுபவர்கள். ஆனால் சூர்யகுமார் யாதவ் சற்று வித்தியாசமானவர். இவரை போன்று ஷாட் ஆடுபவர் இதுவரை இந்திய அணியில் இருந்ததே இல்லை. அதுவும் நம்பர் 4 இடத்தில் கிடைப்பது அறிது.

மிகவும் அறிது

மிகவும் அறிது

பாரம்பரிய முறைப்படி வழக்கமான ஷாட்களை ஆடும் வீரர்கள் கிடைப்பார்கள். ஆனால் சூர்யகுமாரின் ஸ்ட்ரைக் ரேட்டை பாருங்கள். 180+ ஸ்ட்ரைக் ரேட்டுடன் 200 ரன்களுக்கும் மேல் இந்த தொடரில் அவர் அடித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. இந்தியா கோப்பையை வென்றாலும் சரி, இல்லையென்றாலும் சரி, சூர்யகுமார் தான் சிறந்த வீரர் என்பது உறுதி செய்துவிட்டார்.

ஸ்கோர் விவரம்

ஸ்கோர் விவரம்

இந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் 3வது இடத்தில் உள்ளார். இதுவரை 5 இன்னிங்ஸ்களில் ஆடி 225 ரன்களை அடித்துள்ளார். இதில் 3 அரைசதங்கள் அடங்கும். முதலிடத்தில் இந்திய வீரர் விராட் கோலி 246 ரன்களுடன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, November 7, 2022, 16:31 [IST]
Other articles published on Nov 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+