Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“உண்மையில் நீ பெரிய வீரர் தான்பா” சச்சினை முந்திய விராட் கோலி.. புகழ்ந்து தள்ளிய கம்பீர்!

மும்பை: ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் சச்சின் டெண்டுல்கரின் பிரமாண்ட சாதனையை விராட் கோலி முறியடித்த சூழலில் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பாராட்டி தள்ளியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் சுவாரஸ்ய கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா மட்டுமே வெற்றி கண்டுள்ளது.

ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் காம்போ அட்டகாசமான கம்பேக்கை கொடுத்தது தான் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மற்றொருபுறம் விராட் கோலியின் கம்பேக்கையும் ரசிகர்களால் பார்க்க முடிந்தது.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டிருந்த கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் மிகச்சிறப்பான ஷாட்களை அடித்தார். சரியான டைமிங், ஷாட் தேர்வுகள் அனைத்துமே கவனம் ஈர்த்தது. 2வது டெஸ்டில் பெரிய ஸ்கோர் அடித்திருக்க வேண்டிய அவர், அம்பயரின் சர்ச்சை தீர்ப்பால் 44 ரன்களுக்கெல்லாம் விக்கெட்டை பறிகொடுத்தார். 2வது இன்னிங்ஸிலும் 20 ரன்கள் அடித்து அவுட்டானார்.

பெரும் சாதனை

பெரும் சாதனை

பெரிய ஸ்கோரை அடிக்கவில்லை என்றாலும், பிரமாண்ட சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 25,000 ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். சச்சின் டெண்டுல்கர் இதற்கு முன்னர் 577 இன்னிங்ஸ்களில் 25000 ரன்களை அடித்திருந்தார். ஆனால் விராட் கோலி வெறும் 549 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டி அசத்தியிருக்கிறார். சர்வதேச அளவில் ரிக்கிப் பாண்டிங், சங்ககாரா போன்றோர் கூட இவ்வளவு வேகமாக அடிக்கவில்லை.

கவுதம் கம்பீர் பாராட்டு

கவுதம் கம்பீர் பாராட்டு

இந்நிலையில் கோலியின் ரெக்கார்ட் குறித்து கவுதம் கம்பீர் பாராட்டியுள்ளார். அதில், பட்டியல் குறித்தெல்லாம் எனக்கு தெரியாது. விராட் கோலியிடம் உள்ள ஸ்பெஷல் விஷயம் இந்தியாவில் விளையாடுவதை போன்றே தான் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா களங்களிலும் ஆடுகின்றனர். அதிவேக 25,000 ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் அயல்நாட்டு வீரர்கள் இருக்கலாம். ஆனால் ஆசிய துணைக் கண்டத்தில் அவர்களின் ஸ்கோரை பார்க்க வேண்டும்.

டெஸ்ட் கிரிக்கெட் ரெக்கார்ட்

டெஸ்ட் கிரிக்கெட் ரெக்கார்ட்

விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட், டி20-ஐ போன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலும் மிக சிறப்பாக 27 சதங்கள் மற்றும் 28 அரைசதங்களை அடித்திருக்கிறார். அந்த சதங்கள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் என பல நாடுகளில் அடித்துள்ளார். இதனை விட வேறு என்ன சாதிக்க வேண்டும். 25 ஆயிரம் ரன்கள் என்பது அவ்வளவு சாதாரணம் அல்ல.

சிறந்த வீரர்

சிறந்த வீரர்

ஒரு வீரருக்கு டெக்னிக்குகள் மாறலாம், பலவீனம் ஏற்படலாம், குணங்கள் மாறலாம், ஷாட்கள் மாறலாம் . ஆனால் இவை அனைத்தையும் மீறி தான் விராட் கோலி சாதனை படைத்திருக்கிறார். உண்மையில் விராட் கோலி ஒரு சிறந்த வீரர் என கம்பீர் பாராட்டியுள்ளார். நல்ல ஃபார்மில் இருக்கும் கோலி, 3வது டெஸ்டில் சதமடித்து நீண்ட நாள் காத்திருப்பை முடித்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, February 22, 2023, 16:01 [IST]
Other articles published on Feb 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+