Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இனி அதுக்கு அவங்க சரிவரமாட்டாங்க” சீனியர்கள் குறித்து கம்பீர் சர்ச்சை பேச்சு.. ரசிகர்கள் அதிர்ச்சி!

மும்பை: இந்திய அணியின் சீனியர் வீரர்கள் குறித்தும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பேசியுள்ள வார்த்தைகள் ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2023ம் ஆண்டின் முதல் தொடராக இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்ளவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்கள் நடைபெறவுள்ளது.

இதில் டி20 போட்டிகள் ஜனவரி 3, 5, 7ம் தேதிகளிலும், 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் ஜனவரி 10, 12, 15ம் தேதிகளிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அணிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன.

இலங்கை தொடர்

இலங்கை தொடர்

ஆனால் அந்த அணி தேர்வில் தான் தற்போது குழப்பமே உண்டாகியுள்ளது. டி20 தொடருக்கு ஹர்திக் பாண்ட்யா தலைமையிலும், 50 ஓவர் கிரிக்கெட் தொடருக்கு ரோகித் சர்மா தலைமையிலும் அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. டி20 அணியில் ரோகித், கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், விராட் கோலி, ஷமி, அஸ்வின் உள்ளிட்ட அனைத்து சீனியர் வீரர்களும் வாய்ப்பு பெறவில்லை, மாறாக இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

ரசிகர்களுக்கு குழப்பம்

ரசிகர்களுக்கு குழப்பம்

ரோகித், கோலி போன்ற சீனியர் வீரர்கள் யாரும் இன்னும் ஓய்வு பெறவில்லை. எனவே 50 ஓவர் உலகக்கோப்பையில் கவனம் செலுத்துவதற்காக அவர்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளதா? அல்லது அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனரா? என்ற கேள்வி உலா வருகிறது. ஒருவேளை மீண்டும் வாய்ப்பு பெற்றால் 2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை திட்டங்களில் அவர்கள் உள்ளனரா என்ற கேள்வி எழும்.

கம்பீர் அதிருப்தி

கம்பீர் அதிருப்தி

இந்நிலையில் இதுகுறித்து கம்பீர் சர்ச்சை கருத்தை கூறியுள்ளார். அதில், இந்திய அணியில் ஒரு தெளிவு இருக்க வேண்டும். சீனியர்களை தாண்டி வேறு வீரர்களை தேர்வு செய்ய விரும்பினால் அதில் எந்தவித தவறும் இல்லை. நட்சத்திர வீரர்களை புறக்கணிக்கும் போது, ரசிகர்களுக்கு வருத்தமும், கோபமும் வந்துவிடுகிறது. ஆனால் இது ஒரே ஒரு தனிப்பட்ட வீரரின் பிரச்சினை இல்லை என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

சீனியர்களால் முடியாது

சீனியர்களால் முடியாது

2024 டி20 உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என நினைக்கிறோம். அதனை செய்துக்காட்ட சீனியர் வீரர்களால் முடியவில்லை. அப்படி பார்த்தால் அவர்களை தூரம் ஒதுக்கிவிட்டு, இளம் வீரர்களை அணிக்குள் சேர்க்க வேண்டும். சூர்யகுமார் போன்ற இளைய தலைமுறையினர் அந்த கனவை சுலபமாக நனவாக்க முடியும்.

அதிரடியான அணுகுமுறை

அதிரடியான அணுகுமுறை

அதிரடியான அணுகுமுறை என்பதை இந்திய அணி வீரர்கள் கூறி வந்தனர். ஆனால் இங்கிலாந்துடனான அரையிறுதிப் போட்டியில் அது எங்கே போனது என்றே தெரியவில்லை. இளம் வீரர்கள் ஆக்ரோஷ அணுகுமுறையை தான் செய்கிறார்கள். எனவே ஹர்திக் பாண்டியா இருக்கும் நிலையில் ராகுல் திரிபாதி, பிரத்வி ஷா, சஞ்சு சாம்சனை கொண்டு வர வேண்டும் என கம்பீர் கூறியுள்ளார்.

Story first published: Saturday, December 31, 2022, 18:22 [IST]
Other articles published on Dec 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+