Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூர்யகுமார் யாதவை வீட்டுக்கு அனுப்பியதே இவர்தான்.. இந்திய டி20 அணித் தேர்வில் நடந்த ட்விஸ்ட்

மும்பை: இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து சூர்யகுமார் யாதவ் சமீபத்தில் அதிரடியாக நீக்கப்பட்டு. அவருக்கு பதிலாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து டி20 தொடர்களுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டு இருந்தார். சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டதன் பின்னணியில் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இருந்ததாக தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028ல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி மற்றும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டு தங்கம் வெல்ல விரும்புவதாக சூர்யகுமார் யாதவ் பொதுவெளியில் சமீபத்தில் பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு பயிற்சியாளர் கம்பீருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே அணியில் இடமும், கேப்டன் பதவியும் நிரந்தரமாக இருக்கும் என சூர்யகுமாரிடம் கம்பீர் அப்போதே கறாராக எச்சரித்திருந்தார்.

Gautam Gambhir Masterminds Suryakumar Yadav s Captaincy Sacking Recommends Two New Names to BCCI

சூர்யகுமார் யாதவ் மோசமான ஃபார்ம்

இதையடுத்து நடந்த 2026 ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் யாதவ் மிக மோசமாக விளையாடினார். அவர் 147.54 ஸ்டிரைக் ரேட்டில் 270 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது சராசரி 20.77 ஆக அதலபாதாளத்திற்கு சரிந்தது. 2017க்கு பிறகு அவர் சந்தித்த மிக மோசமான சரிவு இதுவாகும். சூர்யகுமாரின் இந்த மோசமான பார்ம் காரணமாக அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்குவது மட்டுமின்றி, ஒட்டுமொத்த டி20 அணியில் இருந்தே கழற்றி விடலாம் என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரிடம் கம்பீர் விவாதித்துள்ளார். அகர்கரும் இதற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

பின்னர் புதிய கேப்டனை தேர்வு செய்யும் போது, சஞ்சு சாம்சன் அல்லது இஷான் கிஷன் ஆகிய 2 பேரில் ஒருவரை நியமிக்கலாம் என கம்பீர் பரிந்துரை செய்துள்ளார். ஆனால், அஜித் அகர்கர் இதற்கு சம்மதிக்கவில்லை. ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான பேட்டிங் மற்றும் அவரது வெற்றிகரமான கேப்டன்ஷிப் திறனை சுட்டிக்காட்டிய அகர்கர், அவரே தகுதியான நபர் என வாதிட்டுள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு

இதையடுத்து பிசிசிஐ-யுடன் ஆலோசனை நடத்திய கம்பீர், சூர்யகுமாரை நீக்குவதற்கான முறையான அனுமதியை பெற்றார். அதன் பின்னர் கம்பீரும், அகர்கரும் இணைந்து ஸ்ரேயாஸ் ஐயரை புதிய டி20 கேப்டனாக ஒருமனதாக தேர்வு செய்தனர்.

ஐபிஎல் ஹீரோ வைபவ் சூர்யவன்ஷியை ஓரம் கட்டிய ருதுராஜ்.. ஒருநாள் போட்டிக்கு ஏற்ற வீரர் என நிரூபணம்

ஐபிஎல் ஹீரோ வைபவ் சூர்யவன்ஷியை ஓரம் கட்டிய ருதுராஜ்.. ஒருநாள் போட்டிக்கு ஏற்ற வீரர் என நிரூபணம்

முன்பு கொல்கத்தா அணியில் விளையாடிய காலத்தில் இருந்தே சூர்யகுமார் யாதவ் மற்றும் கம்பீர் இடையே மிக நெருங்கிய நட்பு இருந்து வந்தது. பெரும்பாலான முடிவுகளில் இருவரும் ஒரே சிந்தனையுடன் செயல்படுவார்கள் என சூர்யகுமாரே பலமுறை கூறியுள்ளார். அப்படிப்பட்ட நெருக்கமான வீரராக இருந்தாலும், பார்ம் இல்லாமல் தவித்த போது அவரை பதவியில் இருந்து நீக்க கம்பீர் தயங்கவில்லை. அணியின் நலன் என்று வரும்போது நண்பராக இருந்தாலும் கம்பீர் எவ்வளவு கறாராக செயல்படுவார் என்பதை இந்த சம்பவம் அப்பட்டமாக நிரூபித்துள்ளது.

Story first published: Wednesday, June 10, 2026, 12:28 [IST]
Other articles published on Jun 10, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+