Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜான்டி ரோட்ஸ் இல்ல.. யார் என்றே யூகிக்க முடியாத நபருக்கு வாய்ப்பு கேட்கும் கம்பீர்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற பயிற்சியாளர்கள் குழுவில் யார் இருக்கப் போகிறார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. தாம் பயிற்சியாளராக நியமிக்கப்படும் பட்சத்தில் தமக்கு யார் வேண்டும் என்ற நபர்களை தான் உதவி பயிற்சியாளர்கள் குழுவில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த சூழலில் கம்பீர் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக வினய் குமார் வேண்டும் என கேட்டு இருந்தார். ஆனால் அதற்கு பிசிசிஐ ஒப்புதல் வழங்கவில்லை. இந்த நிலையில் வெளிநாட்டு பயிற்சியாளர்களை கடந்த சில ஆண்டுகளாக பிசிசிஐ அணியில் சேர்க்கவில்லை. இந்த சூழலில் பில்டிங் பயிற்சியாளராக கிரிக்கெட் ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ் தேர்வு செய்யப்படுவார் என்ற செய்தி வெளியானது.

Gautam gambhir Indian cricket team virat kohli

ஏனென்றால் லக்னோ அணியின் ஆலோசகராக இருக்கும் போது கவுதம் கம்பீருடன், ஜான்டி ரோட்ஸ் நெருக்கமால பணியாற்றி இருக்கிறார். ஆனால் அதற்கும் வாய்ப்பு இல்லை என தற்போது தெரியவந்துள்ளது. இந்த சூழலில் கம்பீர் தமக்கு இந்த நபர் தான் வேண்டும் என்று பிசிசிஐ நிர்வாகத்திடம் போர் கொடி தூக்கி இருக்கிறார்.

அது யார் என்று கேட்டால் நீங்கள் ஷாக் ஆகிவிடுவீர்கள். நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரியான் டென்டஸ்கடே என்ற கிரிக்கெட் வீரரை தான் பீல்டிங் பயிற்சியாளராக சேர்க்க வேண்டும் என்று கம்பீர் வலியுறுத்தியுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ரியான் டென்டஸ்கடே மற்றும் கம்பீர் இணைந்து விளையாடி இருக்கிறார்கள்.

அண்மையில் ஒரு பேட்டியில் பேசிய கம்பீர் ஒருவருக்காக என் நெஞ்சில் நான் துப்பாக்கி குண்டுகளை வாங்க வேண்டும் என்றால் அது ரியான் டென் டென்டஸ்கடேவுக்கு தான் என்று கூறியிருந்தார். அண்மையில் கொல்கத்தா அணியில் பீல்டிங் பயிற்சியாளராக பணியாற்றி அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

அதேபோன்று கொல்கத்தா அணி விளையாடும் கரீபியன் பிரீமியர் லீக், மேஜர் கிரிக்கெட் லீக் போன்ற தொடர்களில் எல்லாம் ரியான் பீல்டிங் பயிற்சியாளராக விளங்கி இருக்கிறார். தாம் சந்தித்ததிலே சுயநலம் இன்றி அணிக்காக இருக்கும் நபர் என்றால் அது இவர்தான் என்று கம்பீர் அவரை பாராட்டி இருக்கிறார். இந்த நிலையில் தமது நண்பருக்காக கம்பீர் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து இருப்பது ரசிகர்களை ஆச்சரியமடைய செய்திருக்கிறது.

Story first published: Thursday, July 11, 2024, 15:11 [IST]
Other articles published on Jul 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+