ராயுடு, தோனி, ரிஷப் பண்ட்.. யாருமே வேணாம்.. இவரைக் கூட்டிட்டு வாங்க.. கம்பீர் அதிரடி!
மும்பை : உலகக்கோப்பைக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. 2019 ஐபிஎல் தொடர் முடிந்த இரண்டு வாரங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது.
இந்த நிலையில், இந்திய பேட்டிங் வரிசையில் இன்னும் உறுதியாகாத 4வது பேட்ஸ்மேன் குறித்த விவாதங்கள் நடந்து வருகின்றன. கெளதம் கம்பீர் யாரும் எதிர்பாராத வீரர் ஒருவரை, அந்த இடத்தில் ஆடவைக்கலாம் எனக் கூறி ஆச்சரியம் அளித்துள்ளார்.

சஞ்சு சாம்சன்
நான்காவது இடத்தில் ராஜஸ்தான் அணி வீரர் சஞ்சு சாம்சனை ஆடவைக்கலாம் எனக் கூறி உள்ளார் கம்பீர். அது பற்றி கூறிய கம்பீர் அவரது திறனை பார்க்கும் போது அவர்தான் சிறந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் என்றார்.

நான்காவது இடத்தில் யார்?
இதே நான்காவது இடத்தில் களமிறங்க அம்பதி ராயுடு, ரிஷப் பண்ட், விஜய் ஷங்கர், தோனி என பல வீரர்களின் பெயர்கள் கூறப்பட்டு வரும் நிலையில், கம்பீர் யாருமே எதிர்பார்க்காத சஞ்சு சாம்சன் பெயரை கூறி உள்ளார்.

ஐபிஎல் செயல்பாடுகள்
சஞ்சு சாம்சன் இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை 4 போட்டிகளில் 146 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதம் அடங்கும். பேட்டிங் சராசரி 48.67 ஆகும். ஆனால், ஐபிஎல் செயல்பாடுகள் உலகக்கோப்பை அணித் தேர்வுக்கு கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என தேர்வுக் குழுத் தலைவர் பிரசாத் கூறி உள்ளார்.

வாய்ப்பு யாருக்கு?
கம்பீரின் தேர்வு வித்தியாசமாக இருந்தாலும், அம்பதி ராயுடு, ரிஷப் பண்ட், விஜய் ஷங்கர் ஆகிய மூவரில் ஒருவரே இந்திய அணிக்கு தேர்வாக அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications