Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகத்திலேயே இவரை விட பெஸ்ட் பீல்டர் யாருமே இல்லை.. புகழ்ந்து தள்ளிய கௌதம் கம்பீர்!

மும்பை : முன்னாள் வீரர் கௌதம் கம்பீர், ரவீந்திர ஜடேஜாவை உலகிலேயே சிறந்த பீல்டர் என குறிப்பிட்டு பாராட்டி உள்ளார்.

Recommended Video

Dhoniயின் Battingஐ புகழ்ந்து தள்ளிய Gambhir

தற்போது உள்ள வீரர்களில் சிறந்த பீல்டர் யார் எனக் கேட்டால் நிச்சயம் அதில் ரவீந்திர ஜடேஜாவின் பெயர் இடம் பெறும்.

சிலர் அவர் தான் தற்போது ஆடும் வீரர்களில் மிகச் சிறந்த பீல்டர் எனவும் கூறி பாராட்டி வருகின்றனர்.

தவிர்க்க முடியாத வீரர்

தவிர்க்க முடியாத வீரர்

ரவீந்திர ஜடேஜாவின் பீல்டிங் திறமை உலகம் அறிந்த ஒன்று. அவரை தாண்டி பந்து அத்தனை எளிதில் செல்ல முடியாது. ஆல் - ரவுண்டரான ஜடேஜா, அவரது பீல்டிங்கும் பலமாக இருப்பதால் அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வருகிறார்.

டேவிட் வார்னர்

டேவிட் வார்னர்

ஜடேஜாவின் த்ரோ துல்லியமானது. ஜடேஜாவிடம் பந்தை அடித்து விட்டு ரன் ஓடி ரன் அவுட் ஆன பேட்ஸ்மேன்கள் எண்ணிக்கை அதிகம். சிறந்த பேட்ஸ்மேன் ஆன டேவிட் வார்னர் ஒருமுறை, தான் ஜடேஜா பீல்டிங் செய்யும் திசையில் கூட பந்தை அடிக்க யோசிப்பேன் என கூறி இருந்தார்.

அவருக்கு இணை யாருமே இல்லை

அவருக்கு இணை யாருமே இல்லை

இந்த நிலையில், ஜடேஜா குறித்து புகழ்ந்து பேசி இருக்கிறார் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர். உலக கிரிக்கெட்டில் அவரை விட சிறந்த பீல்டர் இல்லை, த்ரோ செய்வதில் அவருக்கு இணை யாருமே இல்லை எனவும் அவர் கூறி உள்ளார்.

கம்பீர் பாராட்டு

கம்பீர் பாராட்டு

"உலக கிரிக்கெட்டில் ஜடேஜாவை சிறந்த பீல்டர் யாருமே இல்லை என நினைக்கிறேன். அவர் ஸ்லிப் மற்றும் கல்லி பகுதியில் பீல்டிங் செய்வதில்லை. ஆனால், அவரை விட சிறப்பாக யாராலும் பந்தை த்ரோ செய்ய முடியாது" என்றார் கம்பீர்.

உலகிலேயே சிறந்த பீல்டர்

உலகிலேயே சிறந்த பீல்டர்

"அவரைப் போல யாரும் அவுட்பீல்டில் பீல்டிங் செய்ய முடியாது. அவரை பாயின்ட், கவர் அல்லது எங்கே வேண்டுமானாலும் பீல்டிங் செய்ய வைக்கலாம். ரவீந்திர ஜடேஜா, கிரிக்கெட் உலகிலேயே சிறந்த பீல்டர்." என பாராட்டித் தள்ளினார் கௌதம் கம்பீர்.

ஜாண்டி ரோட்ஸ் பாராட்டு

ஜாண்டி ரோட்ஸ் பாராட்டு

முன்னதாக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரரும், உலகின் சிறந்த பீல்டராக அறியப்படும் ஜாண்டி ரோட்ஸ், ஜடேஜா குறித்த தன் பார்வையை கூறி இருந்தார். "ஜடேஜா சிறந்த கேட்ச்களை பிடித்துள்ளார். அவர் ஈடுபாட்டுடன் இருக்கிறார். பந்தை கவனிப்பதில் நன்றாக செயல்படுகிறார்" என பாராட்டி இருந்தார்.

Story first published: Saturday, June 20, 2020, 11:55 [IST]
Other articles published on Jun 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+