கம்பீர் இன்னும் திருந்தவே இல்ல..? விராட் கோலி ஹீரோ கிடையாதாம்.. காரணத்தை கூறும் கம்பீர்
மும்பை : இந்திய கிரிக்கெட்டில் தற்போதைய ஹீரோ விராட் கோலியோ,ரோஹித் சர்மாவோ கிடையாது என்று முன்னாள் வீரர் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலக கோப்பை லீக் ஆட்டத்தில் விராட் கோலி தனி ஆளாக நின்று 53 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார்.
இதேபோன்று நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 44 பந்துகளில் 62 ரன்கள் கோலி விளாசினார்.

சூர்யகுமாருக்கு பாராட்டு
ரோகித் சர்மாவும் நெதர்லாந்துக்கு எதிராக 37 பந்துகளில் அரை சதம் கடந்தார். இந்த நிலையில் இந்திய அணி வெற்றி குறித்து பேசிய கவுதம் கம்பீர், இந்திய அணியில் ஒரு வீரருக்கு பாராட்டு கிடைக்க வேண்டும் என்றால் அது சூரிய குமார் யாதவ்க்கு தான் என்று கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் சூரிய குமார் யாதவுக்கு பெரிய அளவில் பேட்டிங் செய்யும்போது சாதகமான சூழல் இருந்தது இல்லை.

சூர்யகுமார் காரணம்
ஏனெனில் அவர் எப்போதும் பவர்பிளேவில் விளையாடியது கிடையாது.இருப்பினும் கிட்டதட்ட ஆயிரம் ரன்களும், அதுவும் நல்ல ஸ்ட்ரைக் ரெட்டும் அடித்திருக்கிறார். இதன் மூலம் விராட் கோலி, ராகுல்,ரோகித் சர்மா ஆகியோர் மீதான அழுத்தத்தை பெரும் அளவு சூரியகுமார் யாதவ் குறைக்கிறார். சூரியகுமார் டாப் வரிசையில் அதிரடியாக தொடர்ந்து விளையாடுவதால் மட்டுமே இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் 180 ரன்களுக்கு மேல் இந்தியா அடிக்கிறது என்று கம்பீர்

ரசிகர்கள் அதிர்ச்சி
சூரிய குமாரை பாராட்டுவதில் தவறில்லை. காரணம் நடப்பாண்டி ல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சூரியகுமார் முதலிடத்தில் வகிக்கிறார். என்றாலும் அதற்காக விராட் கோலியை ஏன் பாராட்டுகிறீர்கள் என்பது போல் கௌதம் கம்பீர் பேசி வருவது ரசிகர்களை அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

ஹீரோ கலாச்சாரம்
ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அணியில் ஹீரோ கலாச்சாரம் பரவி வருவதை நிறுத்த வேண்டும் என கம்பீர் கூறிய நிலையில் தற்போது அணி இடையில் பிளவுபடுத்தும் விதமாக கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி நாளை ஞாயிற்றுக்கிழமை தென்னாப்பிரிக்காவில் பெர்த் மைதானத்தில் சந்திக்கிறது பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை இந்தியா பேட்ஸ்மேன்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளன.


Click it and Unblock the Notifications