Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கம்பீர்.. இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லை? ஐபிஎல்-ல இந்த டீம் பிளே-ஆஃப் போகாதா?

மும்பை : 2019 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 23 முதல் துவங்க உள்ள நிலையில், முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் எந்த நான்கு அணிகள் பிளே-ஆஃப் செல்லும் என கணித்துள்ளார்.

பலரும் பிளே-ஆஃப் செல்லும் என குறிப்பிட்ட ஒரு அணியை கம்பீர் தேர்வு செய்யவில்லை என்பது தான் இதில் ஆச்சரியம். எந்த நான்கு அணிகளை கம்பீர் தேர்வு செய்தார்?

பிளே-ஆஃப் அணிகள்

பிளே-ஆஃப் அணிகள்

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நடந்த ஐபிஎல் விவாதத்தில் கம்பீர் பிளே-ஆஃப் செல்லும் அணிகள் என மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய நான்கு அணிகளை குறிப்பிட்டார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் எங்கே?

சென்னை சூப்பர் கிங்ஸ் எங்கே?

என்னப்பா இது கடந்த 2018 சீசன் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைக் காணோம்? என்பதே பலரின் உடனடி கேள்வியாக இருந்தது. இரு ஆண்டுகள் தடையில் இருந்து மீண்டு தோனி தலைமையில் 2018 ஐபிஎல் தொடரில் பங்கேற்ற சிஎஸ்கே அணி, சாம்பியன் பட்டம் வென்றது.

சிஎஸ்கே செல்லுமா?

சிஎஸ்கே செல்லுமா?

சென்ற ஆண்டு ஆடிய அதே அணி இந்த முறையும் பங்கேற்க உள்ளது. இந்த முறையும் சென்னை அணி அசத்தலாக ஆடி பிளே-ஆஃப் செல்லும் என்பதே பலரின் கணிப்பாக உள்ளது. ஆனால், கம்பீர் சிஎஸ்கே அணிக்கு இடமளிக்கவில்லை.

பெங்களூரும் இல்லை

பெங்களூரும் இல்லை

அதே போல, விராட் கோலியின் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணியையும் கம்பீர் கண்டுகொள்ளவில்லை. அந்த அணியும் பிளே-ஆஃப் செல்லாது என கருதுகிறார் கம்பீர். கடந்த ஆண்டு பெங்களூர் அணி பிளே-ஆஃப் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, March 19, 2019, 10:40 [IST]
Other articles published on Mar 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+