Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது நிச்சயமா நடக்கும்.. பாபர் அசாம் குறித்து கம்பீர் எச்சரிக்கை.. ரோகித்தோட ஜெராக்ஸ் வருமா?

மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான பயிற்சி ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே மழையால் பெரும்பாலான பயிற்சி ஆட்டங்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் வரும் அக்டோபர் மாதம் எட்டாம் தேதி இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதும் ஆட்டம் சென்னையில் நடைபெறுகிறது.

Gautam gambhir predicts Babar azam will score 4 centuries in icc world cup 2023

இது மழையால் பாதிக்கப்படுமா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் இருந்துள்ளது. இந்த நிலையில் இந்த உலகக்கோப்பை குறித்து கௌதம் கம்பீர் ஒரு முக்கியமான கருத்தை கூறியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ரோகித் சர்மா தொடக்க வீரராக சிறப்பான பணியை செய்து இருக்கிறார். தற்போது உலகக்கோப்பை இந்தியாவில் தான் நடைபெறுகிறது. ரோகித் சர்மாவிடம் இருக்கும் திறமை குறித்து நமக்கு தெரியும்.

ரோஹித் சர்மா சொந்த மண்ணில் எத்தகைய சாதனை படைத்திருக்கிறார் என்றும் நமக்கு தெரியும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதம் அடித்திருக்கிறார். இந்த உலகக் கோப்பையை ரோகித் சர்மா மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பார். இந்தியாவுக்காக ஒரு திருப்புமுனை ஆட்டத்தை நிச்சயமாக ரோகித் சர்மா வெளிப்படுத்துவார்.

இதேபோல் பாபர் அசாமும் சாதாரண வீரர் கிடையாது. அவரிடம் இருக்கும் கிரிக்கெட் வித்தையை பார்க்கும் போது நிச்சயமாக இந்த உலகக் கோப்பையில் அவர் மூன்று அல்லது நான்கு சதம் பாகிஸ்தான் அணிக்காக விளாசுவார். இந்த உலகக் கோப்பையில் பாபர் அசாமின் ஆட்டம் கவனிக்கத்தக்க வகையில் இருக்கும் என்று கம்பீர் அறிவுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக பாபர் அசாம் 84 பந்துகளை எதிர் கொண்டு 80 ரன்கள் விளாசி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பாகிஸ்தான் அணி நாளை ஆஸ்திரேலியாவை பயிற்சி ஆட்டத்தில் எதிர்கொள்கிறது. இந்திய அணி நாளை நெதர்லாந்தை எதிர்கொள்ள உள்ளது.

Story first published: Monday, October 2, 2023, 14:16 [IST]
Other articles published on Oct 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+