For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs ENG: பும்ரா குறித்து பயிற்சியாளர் கம்பீர் தந்த அப்டேட்.. சீனியர் வீரர்களுக்கு நல்ல செய்தி

மும்பை: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் ஜனவரி இருபதாம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்று மும்பையில் இருந்து புறப்பட்டு லண்டன் செல்கிறது. ஏற்கனவே இந்திய அணியில் இடம் பெற்ற ஆறு வீரர்கள் இங்கிலாந்துக்கு சென்று அங்கு இந்திய ஏ அணியில் இடம்பெற்று விளையாடி வருகின்றனர்.

இந்த சூழலில் புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களை இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீரும், இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனான கில்லும் சந்தித்தனர். அப்போது பேசிய பயிற்சியாளர் கம்பீர், பும்ரா இந்திய டெஸ்ட் அணியில் மிகவும் முக்கியமான வீரர்.
இந்த தொடரில் நாங்கள் அனைவரும் மூன்று போட்டிகளில் பயன்படுத்த தான் முடிவு செய்து இருக்கின்றோம்.

Gautam Gambhir Press meet ahead of India vs England Test series

அது எந்த மூன்று டெஸ்ட் போட்டி என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. பும்ராவிடம் கேட்டு அவருடைய உடல் தகுதி எவ்வாறு இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப முடிவு செய்வோம். ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் நான் இதைத்தான் சொன்னேன்.பும்ரா இல்லை என்றால் வேறு ஒரு வீரருக்கு நிச்சயம் அந்த வாய்ப்பு கிடைக்கும்.

அதனை வீரர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதுமே விக்கெட்டுகள் எடுப்பதுதான் முக்கியம். நீங்கள் ஆயிரம் ரன்கள் எடுத்தாலும் வெற்றி பெற முடியாது. ஆனால் 20 விக்கெட்டுகள் எடுத்தால் மட்டுமே வெல்ல முடியும். இதற்கு தேவையான பந்துவீச்சு இருக்க வேண்டும். நமது அணியில் பல வேகப்பந்துவீச்சாளர்களும் ஆல்ரவுண்டர் வேகப்பந்துவீச்சாளர்களும் இடம்பெற்று இருக்கிறார்கள்.

இங்கிலாந்தை பொருத்தவரை ஆடுகளம் மற்றும் நாம் கவனம் செலுத்த கூடாது. ஆகாயத்தையும் பார்க்க வேண்டும். எங்களால் வெறும் 18 வீரர்களை மட்டும் தான் தேர்வு செய்ய முடியும்.எனவே யார் நல்ல பார்மில் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் நாங்கள் தேர்வு செய்து இருக்கிறோம். வாய்ப்புக்காக அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும். கருண் நாயர் இந்திய அணியில் இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இதன் மூலம் உள்ளூர் கிரிக்கெட் போட்டிக்கான எதிர்காலம் சிறப்பாக இருக்கும். நீங்கள் தொடர்ந்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினால், நிச்சயம் உங்களுக்கான கதவு திறந்து இருக்கும். கருண் நாயரின் அனுபவம் இந்திய அணிக்கு கைகொடுக்கும் என்று நம்புகிறேன். பெங்களூரில் நடைபெற்ற சம்பவம் உண்மையிலே துரதிர்ஷ்டவசமானது. எனக்கு இதுபோல் வெற்றியை கொண்டாடும் பேரணியில் மீது நம்பிக்கை கிடையாது. 2007 ஆம் ஆண்டு செய்த போது எனக்கு பிடிக்கவில்லை. வெற்றி பெறுவது முக்கியம்தான். அதனால் கொண்டாட்டம் என்ற பெயரில் ஒரு உயிர் கூட போகக்கூடாது என்று நினைப்பவன் நான் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, June 5, 2025, 23:38 [IST]
Other articles published on Jun 5, 2025
English summary
Gautam Gambhir Press meet ahead of India vs England Test series
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+