தவானுக்கு பதிலா இவர எடுங்க...!! இல்லைன்னா அவரு கிரிக்கெட் வாழ்க்கையே முடிஞ்சிடும்..!!
லண்டன்:காயத்தால் தவான் உலக கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ள நிலையில் அவருக்கு பதிலாக அம்பத்தி ராயுடுவை தேர்ந்தெடுங்கள் என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறி உள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காயம் அடைந்தார் துவக்க வீரர் தவான். இப்போதைக்கு நியூசிலாந்துக்கு எதிரான போட்டி மற்றும் ஞாயிறன்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி ஆகியவற்றில் ஆடமாட்டார் என்று கூறப்பட்டு உள்ளது.
ஆனால் எலும்பு முறிவு இருக்கலாம் என்ற சந்தேகம் தொடர்வதால், உலகக் கோப்பையே அவருக்கு இனி அவ்வளவுதான் என்ற நிலை எழுந்துள்ளது. தவன் காயம் அவரை உலகக்கோப்பையிலிருந்து விலகச் செய்தால் அவரது இடத்துக்கு அதிரடி வீரர் ரிஷப் பன்ட் சரியான நபர் என்று கவாஸ்கரும், கெவின் பீட்டர்சனும் கூறியிருந்தார்.

இவர் தான் சரியானவர்
இந்நிலையில் ஆங்கில ஊடகத்திற்கு பதில் அளித்த சுனில் கவாஸ்கர், ரிஷப் பன்ட் தான் தவானின் இடத்துக்கு சரியான நபர். ஐபிஎல் முதல் தற்போது பார்மில் உள்ளார் என்றார். இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன், தவான் காயத்தினால் இல்லையா... உடனே ரிஷப் பன்டை தேர்வு செய்யுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்.

ராயுடுவை ஆதரிக்கும் கம்பீர்
ஆனால் ராயுடு தான் வேண்டும் என்று கருத்து கூறியிருக்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர்(இவர் இடது கை ஆட்டக்காரர் என்பதை நினைவில் கொள்க). அவர் கூறியிருப்பதாவது: ராயுடுவுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை எனில் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டது என்று அர்த்தம். அவரது ஒருநாள் சராசரி 45, இந்த சராசரி வைத்திருக்கும் அவர் உலகக்கோப்பை அணியில் இடம்பெறாதது நிச்சயம் ஏமாற்றம் என்றார்.

அழைப்பு
முன்னதாக, 4வது ஆர்டரில் விளையாட இளம் வீரர் ரிஷப் பன்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகக்கோப்பைக்கான தேர்வு பட்டியலில் அவர் இல்லாதது சர்ச்சை கிளப்பியது. அதனால் காயம் அடையும் வீரருக்கு மாற்றுவீரராக களமிறங்கும் வீரர்களில் பட்டியலில் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார்.

இங்கி. பயணம்
அதனால் நியூசி.க்கு அணிக்கு எதிரான போட்டியில் விளையாட ரிஷப் பன்ட் இங்கிலாந்து புறப்பட்டிருப்பதாக தெரிகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications