Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை!

Recommended Video

Gambhir rejected for world cups | 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த கம்பீருக்கு நடந்த கொடுமை!

டெல்லி : இந்திய அணிக்கு இரண்டு முறை உலகக்கோப்பை வென்று கொடுத்த முக்கிய கௌதம் கம்பீர். ஆனால், அவரது கிரிக்கெட் வாழ்வு துவக்கத்தில் மிக மோசமாக இருந்துள்ளது.

2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 50 ஓவர் உலகக்கோப்பையை இந்தியா வெல்ல முக்கியமான வீரர்களில் கம்பீரும் ஒருவர். உலகக்கோப்பை வெற்றிகளுக்கு யுவராஜ் சிங், சச்சின், கேப்டன் தோனி என எத்தனை வீரர்களை நாம் சொன்னலும், கம்பீரை மறுக்க முடியாது.

அந்த கொடுமை

அந்த கொடுமை

கம்பீர் 2007 டி20 உலகக்கோப்பைக்கு முன், மூன்று உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்க தகுதி இருந்தும், அணியில் தேர்வு செய்யாமல் புறக்கணிக்கப்பட்ட கொடுமை நடந்துள்ளது. அதைப் பற்றி அவரே சமீபத்தில் கூறினார். எப்படிப்பட்ட திறமையான வீரருக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளது?

2007 டி20 உலகக்கோப்பை

2007 டி20 உலகக்கோப்பை

2007 டி20 உலகக்கோப்பையில் கம்பீர் தான் இந்திய அணிக்கு அதிக ரன் குவித்தவர். 7 போட்டிகளில் 227 ரன்கள் குவித்தவர். அந்த தொடரில் அதிக ரன் குவித்தவர்களில் இரண்டாம் இடம் பிடித்தார்.

அதிக ரன் குவித்தவர்

அதிக ரன் குவித்தவர்

2007 டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 75 ரன்கள் குவித்தார் கம்பீர். இந்தியா 2007 உலகக்கோப்பை வெல்ல முக்கியமான வீரர்களில் கௌதம் கம்பீரும் ஒருவர்.

2011 உலகக்கோப்பை இறுதி

2011 உலகக்கோப்பை இறுதி

அதே போல, 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் 97 ரன்கள் குவித்தார். அந்தப் போட்டியிலும் இந்திய அணிக்கு அதிக ரன் குவித்தவர் கம்பீர் தான். 2011 உலகக்கோப்பை வெற்றியிலும் அவருக்கு அதிக பங்கு உண்டு.

முன்பு என்ன நடந்தது?

முன்பு என்ன நடந்தது?

ஆனால், அதே கம்பீர் 2007 டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் மூன்று உலகக்கோப்பை தொடர்களில் வாய்ப்பு அளிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. அதைக் கண்டு மனமுடைந்துள்ளார் கம்பீர்.

முதல் இரண்டு வாய்ப்பு

முதல் இரண்டு வாய்ப்பு

இளம் வீரராக இருந்த போது அண்டர் 14 மற்றும் அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் ஆட வேண்டிய கம்பீர் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார். அதை விட மோசமான நிலை 2007இல் ஏற்பட்டுள்ளது.

2007 50 ஓவர் உலகக்கோப்பை

2007 50 ஓவர் உலகக்கோப்பை

2007இல் வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான அணியில் வாய்ப்பு பெற மிக அருகே வந்து வாய்ப்பை தவறவிட்டுள்ளார். அப்போது மனம் வெறுத்துப் போய் இருக்கிறார் கம்பீர்.

கிரிக்கெட்டே வேண்டாம்

கிரிக்கெட்டே வேண்டாம்

கிட்டத்தட்ட கிரிக்கெட்டே வேண்டாம் என்ற முடிவுக்கும் வந்துள்ளார். எனினும், அதிர்ஷ்டவசமாக அடுத்து நடந்த டி20 உலகக்கோப்பையில் தோனி தலைமையிலான இளம் வீரர்கள் கொண்ட அணியில் வாய்ப்பு பெற்றார் கம்பீர்.

உலகக்கோப்பையில் அதிரடி

உலகக்கோப்பையில் அதிரடி

நீண்ட போரட்டதுக்குப் பின் கிடைத்த அந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிரடி காட்டிய கம்பீர், இந்தியா இரண்டு உலகக்கோப்பை வெல்ல காரணமாக இருந்தார். இந்த சம்பவங்களை தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார் அவர்.

முயற்சியை விட்டு விடக் கூடாது

முயற்சியை விட்டு விடக் கூடாது

இந்த மோசமான நிகழ்வுகளுக்குப் பின் தான் வாய்ப்பு பெற்றதை கூறிய அவர், யாரும் முயற்சியை கை விட்டு விடக் கூடாது என கூறினார். இதே கம்பீர், 2013இல் இந்திய அணியில் இருந்து மீண்டும் புறக்கணிக்கப்பட்டார் என்பது தனிக் கதை!

Story first published: Friday, September 20, 2019, 20:17 [IST]
Other articles published on Sep 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+