Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணி பயிற்சியாளர் கம்பீருக்கு வந்த சோக செய்தி!இங்கிலாந்து தொடரிலிருந்து பாதியில் திரும்பினார்

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ள நிலையில் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன கம்பீர் அவசரமாக நாடு திரும்பி இருக்கின்றார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புதிய சைக்கில் வரும் ஜூன் 20ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் இந்தத் தொடரில் குறைந்தபட்சம் இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி ஒரு போட்டியில் டிராவது பெறவேண்டும்.

Gautam Gambhir

இந்திய அணி கடைசியாக 2007 ஆம் ஆண்டு தான் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது. அதன் பிறகு இதுவரை ஒரு தொடரில் கூட இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டி பொறுத்தவரை இந்தியா வெற்றி பெறவில்லை. இந்த வரலாற்றை மாற்ற வேண்டிய உத்வேகத்தில் பயிற்சியாளர் கம்பீர் களமிறங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் இந்த போட்டிக்கான பயிற்சி ஆட்டம் இன்று கென்ட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த சூழலில் இந்திய அணி வீரர்கள் பயிற்சி ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென்று கம்பிருக்கு ஒரு சோகமான செய்தி வந்தது.

அதில் கம்பீரின் தாயார் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக செய்தி வந்தது. இதனால் மணமுடைந்த கம்பீர் உடனடியாக நாடு திறந்து இருக்கின்றார். எனினும் கம்பீர் வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் இங்கிலாந்துக்கு திரும்பி அணி நிர்வாகத்துடன் இருப்பார் என்று கூறப்படுகிறது.

தற்போது கம்பீர் இல்லாத நிலையில் பந்துவீச்சு பயிற்சியாளர் ஆன மோர்னே மோர்க்கல் மற்றும் டென் டோசேட் ஆகியோர் இந்திய அணியை வழிநடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான இந்த தொடரில் பயிற்சி என்பது மிகவும் முக்கியமாக கருதப்படும் நிலையில் கம்பீர் தற்போது இல்லாதது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

Story first published: Friday, June 13, 2025, 17:04 [IST]
Other articles published on Jun 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+