For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இடமே பத்தலை.. தோனியும் நானும் தரையில் படுத்து தூங்கினோம் - கௌதம் கம்பீர்

டெல்லி : தோனியும், கௌதம் கம்பீரும் எலியும், பூனையும் என்பது போன்ற எண்ணம் தான் பலருக்கும் உள்ளது.

Recommended Video

Zaheer Khan தான் காரணம்.. Dhoni தலைமை பற்றி Gambhir கருத்து

அதற்கு காரணம், தோனி, கம்பீரை இந்திய அணியை விட்டு நீக்கினார் என்ற ஒரு தகவலும், கம்பீர் ஓய்வுக்குப் பின் தொடர்ந்து தோனியை கடுமையாக விமர்சித்து வருவதும் தான்.

ஆனால், துவக்கத்தில் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்ததுள்ளது. துவக்க காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை கம்பீர் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

தோனி

தோனி

தோனி 2004இல் இந்திய அணியில் அறிமுகம் செய்யப்பட்டார். அப்போது தோனியின் ஆட்டத்தை விட அவரது ஹேர்ஸ்டைலுக்காகவே அதிக பிரபலம் ஆனார். நீண்ட தலை முடியுடன் இருப்பார் தோனி. இந்திய அணியில் அதன் காரணமாகவே மற்ற வீரர்களால் கவனிக்கப்பட்டார்.

கம்பீர்

கம்பீர்

பின்னர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அணியில் தன் இடத்தை நிரந்தரமானதாக மாற்றிக் கொண்டார். அதே கால கட்டத்தில் இந்திய அணியில் இடம் பெற்று ஆடி வந்தார் கௌதம் கம்பீர். அவர் 2003இல் அறிமுகம் ஆனார். இருவரும் அப்போது சக வீரர்களாக இருந்தனர்.

ஒரே அறையில் தங்கினர்

ஒரே அறையில் தங்கினர்

அப்போது கென்யா, ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இருவரும் ஒரே அறையில் தங்கினர். அப்போது இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருந்தது. அப்போது என்ன பேசிக் கொண்டோம் என்பது பற்றி கம்பீர் கூறி உள்ளார்.

நீண்ட முடி

நீண்ட முடி

"நாங்கள் ஒரு மாதத்துக்கும் மேல் ஒரே அறையில் தங்கி இருந்தோம். நாங்கள் அப்போது முடியை பற்றித் தான் அதிகம் பேசுவோம். அவருக்கு அப்போது நீண்ட முடி இருந்தது. எப்படி அந்த முடியை பராமரிப்பார் என்பது குறித்து பேசுவோம்" என்றார் கம்பீர்.

தரையில் படுத்து உறங்கினோம்

தரையில் படுத்து உறங்கினோம்

மேலும், "ஒரு முறை சிறிய அறையில் இருந்த போது நாங்கள் தரையில் படுத்து உறங்கினோம். முதல் வாரம் அந்த அறையை எப்படி பெரிதாக்குவது என நாங்கள் பேசினோம். அதன் பின் மெத்தைகளை அறையை விட்டு வெளியேற்றினோம். இருவரும் தரையில் விரிப்பை விரித்து படுத்து உறங்கினோம். அது மறக்க முடியாதது" என்றார் அவர்.

இளம் வீரர்கள்

இளம் வீரர்கள்

"அப்போது நாங்கள் இருவரும் இளம் வீரர்கள். தோனி அப்போது தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடத் துவங்கி இருந்தார். நாங்கள் கென்யாவிற்கு சேர்ந்து சென்றோம். ஜிம்பாப்வேவுக்கு இந்தியா ஏ அணியில் இடம் பெற்று சென்றோம்." என்றார்.

அறையை பகிர்ந்து கொண்டால்

அறையை பகிர்ந்து கொண்டால்

"ஒருவருடன் ஒன்றரை மாதத்திற்கு அறையை பகிர்ந்து கொண்டால் அவரைப் பற்றி நாம் அதிகம் தெரிந்து கொள்ள முடியும்" என்றார் கம்பீர். இந்த சம்பவங்களை பகிர்ந்து கொண்ட அதே பேட்டியில் தோனியை கடுமையாக விமர்சனம் செய்யவும் தவறவில்லை கம்பீர்.

கங்குலியால் வெற்றி பெற்ற தோனி

கங்குலியால் வெற்றி பெற்ற தோனி

கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து தான் தோனி வெற்றிகரமான கேப்டனாக இருந்தார் என்றும், குறிப்பாக கங்குலி அணிக்கு அழைத்து வந்த ஜாகிர் கான் இருந்ததால் தான் டெஸ்ட் போட்டிகளில் தோனி வெற்றிகளை பெற்றார் எனவும் குறிப்பிட்டார் கௌதம் கம்பீர்.

Story first published: Monday, July 13, 2020, 16:12 [IST]
Other articles published on Jul 13, 2020
English summary
Gautam Gambhir reveals his experience of sharing room with Dhoni during his earlier days. Both of them sleeping on floor.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+