Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் சர்மாவின் தொடக்க ஜோடி யார் ? இனி ராகுல் பற்றி பேச்சே எடுக்க கூடாது.. கம்பீர் பளிச் பதில்

டெல்லி : இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடர் மூன்றாம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அணியில் பல்வேறு மாற்றங்களை தேர்வு குழு செய்துள்ளது.

குறிப்பாக ஷிகர் தவான், ஒரு நாள் போட்டியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். துணை கேப்டன் பொறுப்பில் இருந்த கே எல் ராகுல் நீக்கப்பட்டு அந்த வாய்ப்பு ஒரு நாள் போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கும், டி20 போட்டியில் சூரியகுமார் யாதவுக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் ரோகித் சர்மாவின் தொடக்க ஜோடியாக யார் களம் இறங்குவார் என்ற சந்தேகம் இருந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டாக தொடக்க வீரராக சிறப்பாக செயல்பட்டு 600 ரன்களுக்கு மேல் சுப்மான் கில் அடித்திருக்கிறார்.

ரோகித் ஜோடி

ரோகித் ஜோடி

இதேபோன்று இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்திருக்கிறார். இதனால், அந்த இடத்திற்கு யார் வருவார் என்று கேள்வி எழுப்பப்பட்டது . இதற்கு பதிலளித்த கௌதம் கம்பீர், இது பற்றி நாம் விவாதிப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவர் இரட்டை சதம் அடித்திருக்கிறார். அவரை எப்படி நீங்கள் நீக்கலாம். இது பற்றி இனி பேசவே கூடாது.என்னை பொறுத்தவரை ரோகித் சர்மாவின் ஜோடியாக இஷான் கிஷன் தான் இடம்பெற வேண்டும்.

இரண்டு பணி செய்கிறார்

இரண்டு பணி செய்கிறார்

கடினமான சூழ்நிலையில் நல்ல பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு அவர் 35 வது ஒவரில் 200 ரன்கள் அடித்திருக்கிறார். எனவே அவர் தான் உங்கள் தொடக்க வீரராக இருக்க வேண்டும். இஷான் கிஷனுக்கு நீங்கள் நிறைய வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர் உங்களுக்கு விக்கெட் கீப்பராகவும் செயல்படுவார். இரண்டு பணியை ஒரே ஆள் செய்கிறார் என்றால் நீங்கள் அவரை தான் தேர்வு செய்ய வேண்டும். இது பற்றி இனி யாரும் விவாதிக்கவே கூடாது என நான் நினைக்கிறேன். இதே சாதனையை வேறு யாரும் செய்திருந்தாலும் நாம் இப்படித்தான் நடந்து கொள்வோமா?

பேட்டிங் வரிசை

பேட்டிங் வரிசை

ஆனால் இஷான் கிஷனை யாரும் பெரிதாக நினைப்பதில்லை. அவரை விட்டு மற்ற வீரர்களை பற்றி பேசுவது நியாயமாக இருக்காது. விராட் கோலி நம்பர் மூன்றாவது இடத்திலும், சூரியகுமார் நம்பர் நான்காவது இடத்திலும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட வேண்டும். ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி இருக்கிறார். இதனால் அவர்தான் ஐந்தாவது இடத்தில் இருக்க வேண்டும். ஸ்ரேயாஸ் ஐயருக்கு குறை இருந்தாலும் அதனை அவர் சிறப்பாக கையாண்டு இருக்கிறார்.

ஸ்ரேயாஸ் ஐயர்

ஸ்ரேயாஸ் ஐயர்

அனைவருக்கும் ஏதேனும் ஒரு குறை இருக்கத்தான் செய்யும். அதனை அவர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பதை தான் நாம் பார்க்க வேண்டும் .ஹர்திக் பாண்டியா நம்பர் ஆறாவது இடத்தில் விளையாட வேண்டும். ஒரு நாள் கிரிக்கெட்டில் அணி இப்படித்தான் இருக்க வேண்டும். கே எல் ராகுல் வேண்டுமானால் கூடுதல் விக்கெட் கீப்பராக அணியில் இருக்கட்டும். உங்களுக்கு கொடுத்த வாய்ப்பை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் ,என்ன செய்ய முடியும்? உங்களுக்கு பதிலாக வேறு ஒருவர் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சென்று விடுவார்கள். அதுவரை நீங்கள் காத்திருக்க வேண்டும் .

கம்பீர் திட்டவட்டம்

கம்பீர் திட்டவட்டம்

இதேபோன்று சுப்மான் கில்லும் சிறப்பாக விளையாடியிருக்கிறார். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அவரும் தன்னுடைய வாய்ப்புக்காக காத்திருப்பது தான் சரியாக இருக்கும். சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் ஏற்படுத்திய தாக்கத்தை இன்னும் ஒரு நாள் போட்டிகளில் ஏற்படுத்தவில்லை. வேண்டுமானால் நீங்கள் அந்த இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை பயன்படுத்திக் கொள்ளுங்கள். என்னை பொறுத்தவரை இந்திய அணி இந்த வீரர்களை வைத்து தான் ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்.

Story first published: Saturday, December 31, 2022, 10:56 [IST]
Other articles published on Dec 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+