ஐபிஎல் மெகா ஏலம்: “வரலாற்றிலேயே புதிய ஃபார்முலா”.. லக்னோ அணியின் திட்டத்தை உடைத்த கம்பீர் - விவரம்
மும்பை: மெகா ஏலத்தின் போது லக்னோ அணியின் திட்டம் என்னவாக இருக்கும் என்பது குறித்து கவுதம் கம்பீர் உடைத்து கூறியுள்ளார்.
Recommended Video
ஐபிஎல் தொடரில் புதிதாக வந்துள்ள லக்னோ அணி கே.எல்.ராகுலை கேப்டனாக ஒப்பந்தம் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அந்த அணியின் பெயர் முதல், வீரர்கள் தேர்வு வரை பின்னால் இருந்து செயல்படுவது கவுதம் கம்பீர் ஆகும். அவர் லக்னோ அணியின் ஆலோசகராக செயல்படவுள்ளார்.

ஐபிஎல் மெகா ஏலம்
ஐபிஎல் மெகா ஏலத்திற்காக லக்னோ அணி கே.எல்.ராகுல், ரவி பிஷ்னாய், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகிய மூன்று பேரை தேர்வு செய்துள்ளது. முதலில் ரஷித் கானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறிய நிலையில், கம்பீர் வந்தவுடன் ஒட்டுமொத்த திட்டத்தையும் மாற்றினார். ரஷித் கானின் இடத்திற்கு இதுவரை ஒரு சர்வதேச போட்டிகளில் கூட விளையாடாத ரவி பிஷ்னாயை தேர்வு செய்தார்.

கம்பீரின் பேச்சு
இந்நிலையில் மெகா ஏலத்தின் போது லக்னோ அணியின் திட்டம் என்ன என்பது குறித்தும் அவர் பேசியுள்ளார். அதில், புதிய ஒரு அணியை உருவாக்குவதில் எனக்கு கிடைத்த பெரும் வாய்ப்பாக பார்க்கிறேன். நாங்கள் இதுவரை உள்ள எந்த பழைய திட்டத்தையும் பின்பற்றப்போவதில்லை. லக்னோ அணிக்கென்று தனி வழி போட்டு பயணிக்கவிருக்கிறோம்.

புதிய திட்டம்
இதுவரை இருந்த சீனியர் + இளம் வீரர்கள் கலந்த அணி என்ற திட்டத்தை மாற்றுவதே லக்னோ அணி திட்டமென்று தெரிகிறது. அணி முழுவதும் திறமையான இளம் வீரர்களை வைத்து விளையாடினால் நீண்ட காலத்திற்கு எந்த பிரச்சினையும் இருக்காது. இதனை உறுதிப்படுத்தியுள்ளது கம்பீரின் மற்றொரு கருத்து.

இளம் வீரர்கள்
மெகா ஏலம் குறித்து பேசியிருந்த அவர், ரவி பிஷ்னாய் மிகவும் இளமையான வீரர். எப்படிப்பட்ட சூழலிலும் விக்கெட் எடுப்பதற்கு அவரை பயன்படுத்தலாம். தற்போதே அவரின் ஆட்டம் சிறப்பாக இருக்கும் சூழலில் அவரின் ஆட்டத்தை மேலும் சிறப்பாக்கினால் லக்னோ அணிக்கு உதவியாக இருக்கும் என கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications