Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனக்கும், தோனிக்கும் என்ன பகை? மனம் திறந்த கவுதம் கம்பீர்.. குப்பை என விமர்சனம்

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கும், தமக்கும் என்ன பகை உள்ளது என்பது குறித்து கவுதம் கம்பீர் மனம் திறந்து உள்ளார்.

கம்பீருக்கும், தோனிக்கும் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. பல முறை வெளிப்படையாகவே தோனி குறித்து கம்பீர்மட்டம் தட்டி பேசியுள்ளார்.

சமீபத்தில் கூட ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா தான் சிறந்த கேப்டன் என்றும் கவுதம் கம்பீர் பேட்டி அளித்துள்ளார்.

மரியாதை

மரியாதை

இந்த நிலையில், உங்களுக்கு அப்படி என்ன தோனி மீது கடுப்பு என்று செய்தியாளர் ஒருவர் கம்பீரிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்துள்ள இந்த கேள்வியே ஒரு குப்பை என்று காட்டமாக பதில் அளித்தார். நானும் தோனியும் எவ்வளவு நெருங்கிய நண்பர்கள் என்று எங்களுக்கு தான் தெரியும். தோனி ரொம்ப நல்லவர். அவர் மீது நிறைய மரியாதை வைத்துள்ளேன்.

சுத்தமாக பிடிக்காது

சுத்தமாக பிடிக்காது

களத்தில் தோனியும், நானும் எதிர் எதிர் அணிகளுக்கு விளையாடும் போது கடுமையாக போட்டி போட்டு கொள்வோம். எங்களுக்குள் எவ்வித பிளவும் கிடையாது. அவருக்கு ஏதாவது ஒரு தேவை என்றால் முதல் ஆளாக நான் தான் நிற்பேன். தோனிக்கு புகழ்ந்து பேசுவது சுத்தமாக பிடிக்காது. அது எனக்கு நன்றாகு தெரியும்.

இருவேறு பார்வைகள்

இருவேறு பார்வைகள்

எனக்கும், தோனிக்கும் கிரிக்கெட்டின் மீது சில வேறுமாதிரியான பார்வைகள் இருந்தன. அதாவது நான் ஒரு மாதிரியாக கிரிக்கெட்டை எதிர்கொள்வேன். தோனி வேறு மாதிரி அணுகுவார். இதில் இரண்டிலும் கொஞ்சம் கூட தவறு இல்லை. தோனி தனிப்பட்ட முறையில் எனக்கும், இந்திய கிரிக்கெட்டுக்கும் பல நன்மைகளை செய்துள்ளார்.

சாதனைகள் படைத்திருப்பார்

சாதனைகள் படைத்திருப்பார்

தோனி பேட்டிங்கில் கீழ்வரிசையில் இறங்கிவிட்டார். அவர் மட்டும் பேட்டிங் வரிசையில் 3வது வீரராக களமிறங்கி இருந்தால் இன்னும் பல்வேறு உலக சாதனைகளை படைத்திருப்பார். நான் 130 கோடி மக்கள் முன்பு சொல்கிறேன், தோனிக்கும், எனக்கும் எவ்வித பகையும் கிடையாது. நாங்கள் நல்ல நண்பர்கள் தான்.

Story first published: Saturday, March 19, 2022, 20:14 [IST]
Other articles published on Mar 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+