Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கம்பீர் : தோனிக்கும், எனக்கும் இடையே எந்த பிளவும் இல்லை! ஆனா இன்னொரு வருத்தம் உண்டு!!

டெல்லி : கௌதம் கம்பீர் தனக்கும், தோனிக்கும் இடையே எந்த பிளவும் இல்லை என தெளிவு படுத்தியுள்ளார்.

கம்பீர் சில நாட்கள் முன்பு அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தன் ஓய்வை அறிவித்தார்.

அதையடுத்து, கம்பீர் அளித்த பேட்டி ஒன்றில் தோனிக்கும், தனக்கும் இடையே மனகசப்பு இருந்ததா என்ற கேள்விக்கு பதில் அளித்தார்.

பல ஆண்டுகளாக வாய்ப்பு இல்லை

பல ஆண்டுகளாக வாய்ப்பு இல்லை

கம்பீர் 2013 ஜனவரிக்கு பின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வாய்ப்பின்றி இருந்தார். அடுத்து சில ஆண்டுகள் கழித்து ஒரு சில டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு பரிசோதனை முயற்சியாக இடம் கிடைத்தது. எனினும், அவரால் தன்னை நிரூபிக்க முடியவில்லை.

ஐபிஎல் தொடரில் கலக்கல்

ஐபிஎல் தொடரில் கலக்கல்

ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்த கம்பீர் கடந்த சீசனில் படு மோசமாக ஆடினார். தன் தோல்வியை ஒப்புக் கொண்டு டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் பதவியை துறந்தார். அடுத்து ரஞ்சி தொடரில் ஆடி வரும் கம்பீர், டெல்லி - ஹைதராபாத் போட்டியுடன் ஓய்வு பெற உள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக வாய்ப்பின்றி கம்பீர் இருந்ததற்கு தோனி தான் காரணம் என்ற ஒரு பேச்சு உண்டு.

எந்த பிளவும் இல்லை

எந்த பிளவும் இல்லை

தோனிக்கும், கம்பீருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது என 2012 காலகட்டத்தில் செய்திகள் வெளிவந்தன. அதை தொடர்ந்தே கம்பீர் வாய்ப்பின்றி இருந்தார். அது பற்றி பேசிய கம்பீர், தனக்கும், தோனிக்கும் இடையே எந்த பிளவும் இருந்தது இல்லை என தெளிவுபடுத்தினார்.

ஒரே மன வருத்தம் இது தான்

ஒரே மன வருத்தம் இது தான்

தனக்கு உள்ள ஒரே மன வருத்தம், தன்னுடன் ஆடிய பல வீரர்கள் 2-3 உலகக்கோப்பையில் ஆடினார்கள். ஆனால், தன்னால் ஒரே ஒரு (50 ஓவர்) உலகக்கோப்பையில் மட்டுமே ஆட முடிந்தது என கூறினார். ஆனால், அந்த உலகக்கோப்பையில் இந்தியா வெற்றி பெற்றது மகிழ்ச்சி எனவும் கூறினார்.

Story first published: Friday, December 7, 2018, 19:37 [IST]
Other articles published on Dec 7, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+