Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பயிற்சியாளரா நீங்க எதுக்கு இருக்கீங்க? இளம் வீரருக்கு செய்த துரோகம்.. டிராவிட்டை விளாசிய கம்பீர்!

மும்பை: இந்திய அணியில் இளம் வீரர் பிரித்வி ஷா தொடர்ச்சியாக ஒதுக்கப்பட்டு வருவதற்காக பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டையும், அணி நிர்வாகத்தினரையும் கவுதம் கம்பீர் கடுமையாக விளாசியுள்ளார்.

வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரை வெற்றிகரமாக முடித்த இந்திய அணி அடுத்ததாக இலங்கை அணியுடனான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இந்த இரண்டு தொடர்களும் ஜனவரி 3ம் தேதி முதல் தொடங்கி ஜனவரி 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான அணிகளும் அறிவிக்கப்பட்டு, வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இலங்கை டி20 தொடர்

இலங்கை டி20 தொடர்

இதில் டி20 அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து, புதிய படையை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். அதற்காக சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளித்துவிட்டு, அவர்களுக்கு மாற்றாக இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், உம்ரான் மாலிக் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பை தந்துள்ளனர்.

 பிரித்வி ஷா புறக்கணிப்பு

பிரித்வி ஷா புறக்கணிப்பு

எதிர்கால படையை உருவாக்க திட்டமிட்டதெல்லாம் பாராட்டும் வகையில் இருந்தாலும் இளம் வீரர் பிரித்வி ஷா மட்டும் ஒதுக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்டர் 19 உலகக்கோப்பையை வென்றுக்கொடுத்த கேப்டனான பிரித்வி ஷா, எதிர்கால சூப்பர் ஸ்டாராக வருவார் என கணிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில சொதப்பல்களால் அணியில் கண்டுக்கொள்ளப்படாமலேயே இருக்கிறார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடியும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

கம்பீர் அதிருப்தி

கம்பீர் அதிருப்தி

இந்நிலையில் இதற்காக கம்பீர் அதிருப்தி தெரிவித்துள்ளார். அதில், இந்திய அணியில் பயிற்சியாளர் என ஒருவர் எதற்காக இருக்கிறார்? தேர்வுக்குழுவினர் எதற்காக இருக்கிறார்கள்?. வெறும் அணியை தேர்வு செய்வதற்கும், தயார்படுத்துவதற்கு மட்டும் அவர்கள் இங்கு இல்லை, சிறந்த வீரர்களை கண்டறிந்து அவரை அணிக்கு ஏற்றவாறு தயார்படுத்த வேண்டும்.

2 விஷயம் முக்கியம்

2 விஷயம் முக்கியம்

பிரித்வி ஷா போன்ற வீரர்கள் சற்று சொதப்பினால், அவர்களிடம் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு அதிகாரிகள் பேசி, அறிவுரைகளை கூறி சரியான பாதையில் செல்வதற்கு வழிநடத்த வேண்டும். இதுதான் முக்கிய பணியாகும். தேசத்திற்காக விளையாட விரும்பினால் அது பயிற்சியானாலும் சரி, ஒழுக்கமானாலும் சரி, சரியாக செய்துவிட வேண்டும். அதற்கு பயிற்சியாளர்கள் தான் உதவ வேண்டும். அப்படி பார்த்தால் முதலில் பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு தர வேண்டும். ஒருவேளை சொதப்பினால் அதன்பின்னர் விட்டுவிடுங்கள் என கம்பீர் கூறியுள்ளார்.

Story first published: Saturday, December 31, 2022, 18:03 [IST]
Other articles published on Dec 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+