Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீங்க என்னதான் தயார் ஆகுறீங்கனு தெரியல... மும்பை வீரருக்கு வாய்ப்பு இல்லை... கோலியை விளாசிய கம்பீர்

அகமதாபாத்: 3வது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பளிக்கப்படாதது குறித்து விராட் கோலிக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார் கவுதம் கம்பீர்.

Recommended Video

8 விக்கெட் வித்தியாசத்தில் India-வை வீழ்த்திய England.. தொடரிலும் முன்னிலை

நேற்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணியில் டாப் ஆர்டர் சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது.

இந்நிலையில் சூர்யகுமார் யாதவுக்கு அநியாயம் செய்தது போல் கோலியிடம் கோபம் காட்டியுள்ளார் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர்.

3வது டி20

3வது டி20

இரு அணிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் மீண்டும் சொதப்பியது. அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ரோகித் சர்மா 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் மீண்டும் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். கடந்த போட்டியில் அசத்திய இஷான் கிஷான் 4 ரன்களுக்கு வெளியேற பண்ட்-ம் 25 ரன்களை எடுத்து ஏமாற்றமளித்தார். கேப்டன் கோலி மட்டுமே 77 ரன்கள் அடித்து அணிக்கு உதவினார். இதனால் இந்திய அணி 156 ரன்களை குவித்தது.

வாய்ப்பு

வாய்ப்பு

157 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பளித்திருந்தால் தற்போது இந்திய அணி திணறி இருக்காது என ரசிகர்கள் விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டனர். 2வது போட்டியில் அவர் அணியில் இருந்தபோதும் ஆடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

கம்பீர் காட்டம்

கம்பீர் காட்டம்

இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் கம்பீர், உலகக்கோப்பைக்கு இன்னும் 7 மாதங்கள் இருக்கும் நிலையில் சூர்யகுமார் யாதவ் தயாராக வேண்டும். அவர் சர்வதேச போட்டியில் என்ன ஃபார்மில் உள்ளார் என தெரியுமா, ஒரு வேளை உலகக்கோப்பையின் போது அணியில் 4வது வீரராக இருக்கும் வீரருக்கு காயம் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள். உதாரணத்திற்கு 4வது இடத்தில் ஸ்ரேயாஸ் இருந்தால் அவருக்கு மாற்றாக ஒரு வீரரை எப்படி எடுப்பீர்கள்.

பழைய வீரர்களே தான்

பழைய வீரர்களே தான்

ஒரு வீரரை சர்வதேச அளவில் ஆட தயார் செய்யுங்கள். சூர்யகுமார் யாதவுக்கு 3 அல்லது 4 போட்டிகளில் ஆட வாய்ப்பு கொடுங்கள். அவர் சிறப்பாக செயல்பட்டால். அணியின் 4வது வீரருக்கான மாற்று வீரராக கண்டிப்பாக இருப்பார். எதிர்காலத்தில் அணிக்கு உதவுவார். இங்கு அனைவரும் உலகக்கோப்பைக்கு இந்திய அணி தயாராகி வருகிறது என சொல்கிறார்கள்.ஆனால் இங்கு எந்த பணிகளும் நடக்கவில்லை. நாம் பல வருடங்களாக ஆடும் பழைய வீரர்களையே தான் பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, March 17, 2021, 22:54 [IST]
Other articles published on Mar 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+