Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திரும்பவும் அதே தப்ப செய்யாதீங்க.. 2 உலகக்கோப்பையில் இந்தியா செய்த தவறு.. கம்பீர் கடும் எச்சரிக்கை!

மும்பை: ஒவ்வொரு உலகக்கோப்பை தொடர் வரும் போதிலும் இந்திய அணி ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்கிறது என பிசிசிஐ மீது முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.

இந்திய அணி தற்போது இலங்கைக்கு எதிராக 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதி வருகிற்து. இதனை தொடர்ந்து நியூசிலாந்து தொடர் வரவுள்ளது.

இந்த தொடர்களுக்காக அணி தேர்வில் பிசிசிஐ வித்தியாசமான முடிகளை எடுத்து வருகிறது. அதாவது டி20 கிரிக்கெட் அணிக்கு ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இளம் படையும், ஒருநாள் கிரிக்கெட்டிற்கு ரோகித் சர்மா தலைமையிலான அணியும் உருவாக்கப்பட்டு வருகிறது.

 உலகக்கோப்பை சொதப்பல்

உலகக்கோப்பை சொதப்பல்

2023ம் ஆண்டு வரவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்காகவும், 2024ம் ஆண்டு வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரை மனதில் வைத்தும் இந்திய அணி உருவாக்கப்பட்டு வருகிறது. அதன்படி 50 ஓவர் கிரிக்கெட்டிற்கு தற்போதே 20 பேர் கொண்ட பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிட்டது. அவர்கள் 20 பேருக்கு மட்டும் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்கவுள்ளதாக தெரிகிறது.

கம்பீர் விமர்சனம்

கம்பீர் விமர்சனம்

இந்நிலையில் இந்தியாவின் திட்டங்கள் குறித்து கவுதம் கம்பீர் விளாசியுள்ளார். அதில், கடந்த 2 உலகக்கோப்பைகளாக இந்திய அணி நடந்து வரும் தவறு என்னவென்றால், ப்ளேயிங் 11ல் இருந்த வீரர்கள் அதிகளவில் ஒன்றிணைந்து விளையாடாதது தான். உலகக்கோப்பைகாக சென்ற ப்ளேயிங் 11, எத்தனை முறை அதற்கு முன்பு இணைந்து விளையாடியுள்ளார்கள். நேராக உலகக்கோப்பைக்கும் மட்டும் சென்றால் எப்படி அது வெற்றிகரமாக அமையும்.

ஓய்வு தேவைதானா?

ஓய்வு தேவைதானா?

அடுத்து வரும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்காக தற்போது இருந்தே ஒரு சிறப்பான ப்ளேயிங் 11 தேர்வு செய்யப்பட்டு, தொடர்ந்து விளையாட வேண்டும். அவர்கள் ஐபிஎல் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து கூட ஓய்வு பெற்றுக்கொள்ளலாம். ஆனால் 50 ஓவர் என வரும் போது ஒன்றிணைந்து விளையாட வந்துவிட வேண்டும். இதனை செய்தால் மட்டுமே உலகக்கோப்பையில் ஜொலிக்க முடியும்.

ஐபிஎல் முக்கியமில்ல

ஐபிஎல் முக்கியமில்ல

ஐபிஎல் தொடரில் ஓய்வு எடுத்துக்கொள்ளலாமே?, உலகக்கோப்பையை விட ஐபிஎல் ஒன்றும் பெரிது கிடையாது. ஏனென்றால் ஐபிஎல் ஒவ்வொரு வருடமும் வருகிறது, ஆனால் உலகக்கோப்பை தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வருகிறது. எனவே பயமின்றி விளையாடும் இளம் வீரர்களை தேர்வு செய்யுங்கள், அவர்களை வைத்து அணியை உருவாக்குங்கள் என கம்பீர் கூறியுள்ளார்.

Story first published: Thursday, January 5, 2023, 20:13 [IST]
Other articles published on Jan 5, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+