Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குறையை சொன்னால், கோபப்படுவதா? கம்பீர் தவறை மீண்டும் சுட்டிக்காட்டிய அஸ்வின்

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டது குறித்து பல முன்னாள் வீரர்கள் பல விமர்சனங்களை முன் வைத்தார்கள். இதனை ஏற்றுக் கொள்ள முடியாத கம்பீர முன்னாள் வீரர்கள் மீது கடும் குற்றச்சாட்டை வைத்தார்.

யூடியூபில் பணம் சம்பாதிப்பதற்காக எது வேண்டுமானாலும் பேசலாமா என்று கம்பீர் கூறியிருந்தார். இந்த நிலையில் கம்பீரின் கருத்திற்கு தற்போது அஸ்வின் பதிலடி கொடுத்திருக்கிறார். இது குறித்து பேசிய அஸ்வின், வெஸ்ட் இண்டீஸ் அணியில் நிதிஷ்குமாருக்கு என்ன ரோல் கொடுத்திருக்கிறீர்கள்?

Gautam Gambhir

அவர் பேட்ஸ்மேனா? இல்லை பௌலரா? அப்படி இருந்தால் நீங்கள் அக்சரை சேர்த்து இருக்கலாமே? அவர் என்ன குறை செய்து விட்டார். பல போட்டிகளில் மேட்ச் வின்னராக அக்சர் பட்டேல் இருந்திருக்கிறார். எதற்காக நிதிஷ் குமார் அணியில் இருக்கிறார். கூடுதலாக ஒரு பந்துவீச்சாளர் வைத்து விளையாட கூடாது என்று நான் சொல்லவில்லை.

அப்படி வேண்டுமென்றால் நீங்கள் ஒரு பேட்ஸ்மனை வைத்து விளையாடி இருக்கலாம். நிதிஷ் குமாரை விட அக்சர் பட்டேல் அதிகமாக சாதித்திருக்கிறார். சுழற்பந்துவீச்சிக்கு எதிராக அக்சர் பட்டேல் அபாரமாக தற்காத்து விளையாடுவார். அவரை சரியாக நீங்கள் பயன்படுத்தவில்லை.
சிராஜ், பும்ரா போன்ற வீரர்கள் இருக்கும்போது நிதிஷ் குமார் பேட்டிங் பலத்திற்காக மட்டுமே சேர்த்திருக்க வேண்டும்.

நிதிஷ் குமார் ஒரு நல்ல பேட்ஸ்மேன் தான். ஆனால் அவருடைய பணியில் தெளிவு இல்லை என்று அஸ்வின் கடுமையாக சாடியிருந்தார். தற்போது ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இல்லாத நிலையில், நிதிஷ்குமார் ரெட்டி ஆஸ்திரேலிய தொடரிலும் சேர்க்கப்பட்டிருக்கிறார். கம்பீர், அணி தேர்வு குறித்து முன்னாள் வீரர்கள் விமர்சிப்பதை கடுமையாக சாடியிருந்த நிலையில் மீண்டும் அஸ்வின் தனது கருத்தை தெரிவித்து கம்பீருக்கு தக்க பதிலடி கொடுத்திருப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.

Story first published: Wednesday, October 15, 2025, 23:32 [IST]
Other articles published on Oct 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+