Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

12 வருசம் ஆச்சு.. இன்னும் வன்மத்தை கக்கும் கம்பீர்! ஆட்டநாயகன் தேர்வு செய்தது குறித்து புலம்பல்

மும்பை : ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியிலும் ஆட்டநாயகன், தொடர் நாயகன் என்ற விருது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தங்களது அணிக்காக எந்த வீரர் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்.

வெற்றி தோல்வியை தாண்டி அவருக்கு இந்த விருது வழங்கப்படும். பொதுவாக இந்த விருதை கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தான் தேர்வு செய்து வழங்குவார்கள். இந்த விதி தான் தற்போது மாற்றப்பட வேண்டும் என்று கம்பீர் கூறியிருக்கிறார். இதற்குப் பின்னால் ஒரு காரணமும் இருக்கிறது.

Gautam gambhir urges to change the mechanism of selecting man of the match award

2011 ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை இறுதி போட்டியில் இலங்கைக்கு எதிராக இந்திய அணி விளையாடிய போது கம்பீர் 97 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதிப் போட்டியில் சச்சின்,ஷேவாக் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்த பிறகு கம்பீர்தான் நிலைத்து நின்று ஆடி இந்தியாவுக்கு வெற்றியை தேடி தந்தார். ஒரு கட்டத்தில் விராட் கோலி ஆட்டம் இழந்தவுடன் யாருமே எதிர்பாராத வகையில் நம்பர் நான்காவது இடத்தில் களமிறங்கிய கேப்டன் தோனி கம்பீர உடன் இணைந்து அபாரமாக விளையாடினார்கள்.

முரளிதரன் மற்றும் மலிங்கா ஓவரை நன்றாக அடித்து ஆடிய தோனி 91 ரன்கள் சேர்த்து கடைசி வரை நின்று வெற்றியை பெற்று தந்தார்.ஆனால் கம்பீர் வெற்றிக்கு முன்பே ஆட்டமிழந்துவிட்டார்.இதன் காரணமாக இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது தோனிக்கு வழங்கப்பட்டது. இது கம்பீர் மனதில் மாறாத வடுவாக மாறிவிட்டது. இந்த சம்பவம் நடைபெற்று 12 ஆண்டுகள் ஆகியும் கம்பீர் தற்போது இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், ஒவ்வொரு போட்டியிலும் யார் சிறப்பாக விளையாடுகிறார்கள் என்ற ஆட்டநாயகன் விருதை தேர்வு செய்யும் பொறுப்பு கிரிக்கெட் வர்ணனையாளர்களிடம் இருக்கக் கூடாது.நானும் ஒரு வர்ணனையாளராக பணியாற்றி இருக்கிறேன் அப்படி இருக்கும்போது எனக்கு வேண்டியவர்களுக்கு நான் இந்த விருது வழங்கக் கூடும். எனவே இந்த நடைமுறையை தடுத்து நிறுத்த வேண்டும்.என்னை பொறுத்தவரை எந்த அணி தோல்வி அடைகிறதோ அந்த அணியின் கேப்டன் அல்லது பயிற்சியாளர் இருவரும் இணைந்து ஆட்டநாயகன் விருதை தேர்வு செய்ய வேண்டும் என்று கம்பீர் கூறியுள்ளார்.

Story first published: Thursday, December 28, 2023, 7:22 [IST]
Other articles published on Dec 28, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+