Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனிக்கு அடுத்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார்? மூன்று பெயர்களை சொல்லும் கௌதம் கம்பீர்!

மும்பை : முன்னாள் வீரர் கௌதம் கம்பீர், தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக செயல்பட மூன்று இளம் வீரர்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார்.

தோனி ஓய்வு பெறப் போகிறாரா? இல்லையா? என தெரியாத நிலையில் அவர் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல், சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்து அடுத்தகட்ட முடிவை எடுக்க வேண்டும் என கூறி இருக்கிறார் கம்பீர்.

மேலும், தோனிக்கு பின் அணியில் மூன்று இளம் விக்கெட் கீப்பர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

தோனி நிலை குழப்பம்

தோனி நிலை குழப்பம்

உலகக்கோப்பை தொடருக்கு பின் தோனி ஓய்வு பெற உள்ளார் என முதலில் கூறப்பட்டது. ஆனால், தோனி தரப்பில் இருந்து அப்படி எந்த செய்தியும் இதுவரை வரவில்லை. இதனால், அணியில் தோனிக்கு இடம் கொடுப்பதா? வேண்டாமா? என இந்திய அணி நிர்வாகம் குழப்பத்தில் உள்ளது.

ஓய்வு பெற வேண்டும்

ஓய்வு பெற வேண்டும்

தோனி ஓய்வு பெற வேண்டும் என்பதை நாசூக்காக தெரிவித்துள்ளார் கம்பீர். அவர் கூறுகையில், "ஆஸ்திரேலியாவில் சிபி சீரிஸ் தொடரில் ஆடும் போது, சச்சின், சேவாக், நான் - மூவரும் ஒரே நேரத்தில் அணியில் ஆட முடியாது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப் போகிறேன் என்றார் தோனி. எனவே, எதிர்காலம் தான் முக்கியம். எனவே, உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுப்பதை விட நடைமுறைக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டியது முக்கியம்" என்றார்.

இளம் விக்கெட் கீப்பர்கள்

இளம் விக்கெட் கீப்பர்கள்

அடுத்த விக்கெட் கீப்பர் பற்றி பேசுகையில், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் அல்லது விக்கெட் கீப்பாரக வாய்ப்பு உள்ள யாராக இருந்தாலும் அணியில் அவர்களை விக்கெட் கீப்பராக்க வேண்டும் என்று கூறினார்.

வாய்ப்பு கொடுங்கள்

வாய்ப்பு கொடுங்கள்

தேர்வு செய்யப்படும் இளம் விக்கெட் கீப்பருக்கு ஒன்றரை வருடம் வாய்ப்பு கொடுத்து பார்க்க வேண்டும். அவர்கள் செயல்படாத நிலையில், அடுத்த வீரருக்கு வாய்ப்பு அளித்துப் பார்க்க வேண்டும் என்றார் கம்பீர்.

யாருக்கு வாய்ப்பு?

யாருக்கு வாய்ப்பு?

கம்பீர் மூன்று விக்கெட் கீப்பர் பெயர்களை கூறினாலும், இந்திய அணியில் ரிஷப் பந்த் தான் அடுத்த விக்கெட் கீப்பர் என கூறப்படுகிறது. உலகக்கோப்பை அணியில் கூட ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டு சில போட்டிகளில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, July 19, 2019, 14:43 [IST]
Other articles published on Jul 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+