மீண்டும் ஒரு "தேவதை"க்கு அப்பாவானார் காம்பீர்
டெல்லி: கௌதம் காம்பீரின் மனைவி இரண்டாவதாக ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதை காம்பீர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
காம்பீருக்கும், நடாஷாவுக்கும் கடந்த அக்டோபர் 2011-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஆசின் என்ற பெண் குழந்தை உள்ளார்.

மீண்டும் கர்ப்பம் தரித்த நடாஷாவுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை தனது மகள் ஆசின் மடியில் புதிதாக பிறந்த குழந்தை வைத்திருக்கும் புகைப்படத்தை எடுத்து டுவிட்டரில் காம்பீர் வெளியிட்டுள்ளார்.
அப்போது அவர் தெரிவிக்கையில், கடவுள் எங்களுக்கு மற்றொரு தேவதையை கொடுத்துள்ளார். அவர் எங்கள் வாழ்வை வளப்படுத்துவார். சின்னஞ்சிறு தேவதையே நல்லுலகத்திற்கு வந்துள்ளதை வரவேற்கிறேன் என்று காம்பீர் கருத்து பதிவிட்டுள்ளார்.
தகவலறிந்து காம்பீரின் சக விளையாட்டு வீரர்களான இர்ஃபான் பதான், ராகுல் சர்மா உள்ளிட்டோரும் அவரது ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications