கங்குலி பற்றி கோலி கருத்து.. கவாஸ்கர் எதிர்ப்பு.. கவுதம் கம்பீர் ஆதரவு!
டெல்லி : சவுரவ் கங்குலி கேப்டனாக இருந்தபோது ஆரம்பித்த வெற்றிப் பயணத்தை தற்போது இந்திய அணி தொடர்ந்து வருவதாக இந்திய கேப்டன் கோலி கருத்து தெரிவித்திருந்தார். பகலிரவு போட்டியின் வெற்றியை அடுத்து இதை அவர் கூறியிருந்தார்.
கோலியின் இந்த கருத்துக்கு பதிலளித்த முன்னாள் கேப்டன் கவாஸ்கர், 2000ங்களில் கங்குலியின் காலத்தில்தான் இந்தியா வெற்றியை துவக்கியதாக கூறியதற்கு மறுப்பு தெரிவித்தார். 70 மற்றும் 80களிலேயே இந்தியாவின் வெற்றிப் பயணம் துவங்கிவிட்டது என்றும் அப்போது கோலி பிறந்திருக்க மாட்டார் என்றும் அவர் கூறியிருந்தார்.
தற்போது கோலியின் இந்த கருத்தை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் ஆமோதித்துள்ளார். கவாஸ்கர், கபில்தேவ் காலத்தில் உள்ளூர் போட்டிகளில்தான் இந்தியா சிறந்து விளங்கியதாக கூறியுள்ள கம்பீர், கங்குலி தலைமையின்கீழ்தான் வெளிநாட்டு போட்டிகளில் இந்தியா சிறப்பாக விளையாடியதாக தெரிவித்துள்ளார்.

கங்குலிக்கு புகழாரம் சூட்டிய கோலி
நடந்து முடிந்துள்ள இந்தியாவின் முதல் பகலிரவு போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. தன்னுடைய முதல் சதத்தை இந்த போட்டியில் பதிவு செய்துள்ளார் கோலி. போட்டியை அடுத்து பேசிய கோலி, டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாட கற்றுக் கொண்டதாகவும், கங்குலி கேப்டனாக இருந்தபோது துவங்கிய இந்த பயணத்தை இந்திய அணி தற்போது தொடர்வதாகவும் தெரிவித்திருந்தார்.

வரலாற்றை திரும்பி பாருங்க...
இந்திய அணியின் கேப்டன் கோலியின் இந்தக் கருத்துக்கு முன்னாள் கேப்டன் கவாஸ்கர் மறுப்பு தெரிவித்திருந்தார். ஏதோ 2000ல் தான் இந்திய அணி வெற்றிப் பயணத்தை துவங்கியதாக பேச வேண்டாம் என்றும் 70 மற்றும் 80களிலேயே தன்னுடைய வெற்றிகளை இந்தியா பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

கவாஸ்கர் கருத்து
70 மற்றும் 80களில் இந்திய அணி தன்னுடைய வெற்றிப் பயணத்தை துவக்கிவிட்டது. உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பல வெற்றிகளை பெற்றது என்று தெரிவித்த கவாஸ்கர், அப்போது கோலி பிறந்திருக்க மாட்டார் என்று தெரிவித்திருந்தார். மேலும் பிசிசிஐ தலைவர் என்பதாலேயே அவரை பாராட்ட கோலி இந்த கருத்தை தெரிவித்திருக்கலாம் என்றும் கூறினார்.

கோலிக்கு ஆதரவு கருத்து
இந்நிலையில், கங்குலி குறித்த கோலியின் கருத்தை முன்னாள் வீரர் கவுதம் ஆமோதித்துள்ளார். சவுரவ் கங்குலியின் தலைமையில்தான் நாம் அதிக அளவிலான வெளிநாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றோம். இதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications