Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவை மிரட்ட காத்திருக்கும் ஷாகின் ஆப்ரிடி.. அவரை எதிர்கொள்வது எப்படி.. கவுதம் கம்பீர் அட்வைஸ்

மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து கவுதம் கம்பீர் இந்திய வீரர்களுக்கு அட்வைஸ் வழங்கியுள்ளார்.

டி20 உலக கோப்பையில் கடந்த முறை பாகிஸ்தானிடம் இந்திய அணி முதல் முறையாக தோல்வியை தழுவியது. இதற்கு முக்கிய காரணமாக ஷாகின் ஆப்ரிடி இருந்தார்.

இதன் மூலம் இந்திய அணிக்கு மோசமான தொடக்கமாக அமைந்தது. இதனால் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல் இந்திய அணி வெளியேறியது.

இந்தியாவுக்கு ஆபத்து

இந்தியாவுக்கு ஆபத்து

ஷாகின் ஆப்ரிடி வீசிய முதல் ஓவரிலேயே ரோகித் சர்மாவும், 3வது ஓவரில் கேஎல் ராகுலும் ஆட்டமிழந்தனர். இதனால் மற்ற வீரர்களுக்கு நெருக்கடி அதிகரித்து இந்தியா தோல்வியை தழுவியது. இந்த நிலையில் ஷாகின் ஆப்ரிடி ஆசிய காப்பை தொடரில் விளையாடவில்லை. இதனால் இந்தியாவுக்கு சாதகம் என்று விமர்சனம் எழுந்தது.

கம்பீர் அட்வைஸ்

கம்பீர் அட்வைஸ்

இந்த நிலையில் காயத்தில் இருந்து குணம் அடைந்து இந்தியாவுக்கு எதிராக ஷாகின் ஆப்ரிடி விளையாட உள்ளார். இந்த நிலையில் கம்பீர் அளித்துள்ள பேட்டியில் ஷாகின் ஆப்ரிடி பந்துவீச்சை நீங்கள் அடித்து அதிரடியாக ஆட வேண்டும். அவரது ஓவரில் விக்கெட் கொடுக்கக் கூடாது என்று நீங்கள் தற்காப்பு ஆட்டத்தில் ஆடினால் அது உங்களுக்கு சிக்கலை கொடுக்கும்.

அடித்து ஆடுங்கள்

அடித்து ஆடுங்கள்

உங்களுக்கு நெருக்கடி தான் அதிகரிக்கும். டி20 கிரிக்கெட்டில் விக்கெட் கொடுக்காமல் தடுப்பாட்டத்தில் விளையாடுவது சரிவராது. ஷாகின் ஆப்ரிடி புதிய பந்தில் அபாயகரமாக வீசுவார் என்று எனக்கு தெரியும். இருப்பினும் இந்திய வீரர்கள் ரன் சேர்க்க தான் பார்க்க வேண்டும். பந்தை அடிக்காமல் டைமிங் சாட்டை ஆட வேண்டும்.

ரோகித்தின் மைனஸ்

ரோகித்தின் மைனஸ்

இந்திய அணியின் பேட்டிங் அபாரமாக இருப்பதால் எவ்வித சிக்கலும் இருக்காது என்று கம்பீர் கூறியுள்ளார். இந்திய அணி ஏற்கனவே தற்போது அதிரடியாக ஆடி தான் ரன்கள சேர்த்து வருகிறது. இதே போன்று இடதுகை வேகப்பந்துவீசசாளரை எதிர்கொள்ள ரோகித் சிரமப்படுகிறார் என்ற விமர்சனமும் உள்ளது. இரு அணிகளும் வரும் 23ஆம் தேதி மெல்போர்னில் மோதுகிறது.

Story first published: Friday, October 14, 2022, 14:18 [IST]
Other articles published on Oct 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+