Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யோ-யோ சோதனையில் தேறியாச்சு..... டீமில் இடம் கிடைக்குமா... காத்திருப்பது யார் தெரியுமா!

Recommended Video

யோ-யோ சோதனையில் தேறியாச்சு....டீமில் இடம் கிடைக்குமா...வீடியோ

டெல்லி: யோ - யோ உடற்தகுதி சோதனை தேவையா என்பது குறித்த விவாதம் நடக்கும் நிலையில், அந்த சோதனையில் தேறிய ஒருவர் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்று காத்திருக்கிறார். அது யார் தெரியுமா. அப்படியே மெதுவாக படிக்கவும்.

இந்திய கிரி்க்கெட் வீரர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய சவாலான விஷயம் யோ - யோ உடற்தகுதி சோதனைதான். மேட்சில் அடித்து தூள் கிளப்பினாலும், இந்த சோதனையில் வென்றால்தான் அணியில் இடம்பெற முடியும்.

Gautham gambhir daughter taking yo-yo test

இது தேவையா என்பது குறித்து மிகப் பெரிய விவாதம் நடந்து வருகிறது. பல முன்னாள் வீரர்கள், நேரடியாகவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஒரு வீரர் உடல் தகுதியுடன் உள்ளாரா என்பதற்காக நடத்தப்படும் இந்த யோ யோ சோதனை தேவைதான். ஆனால், அது மட்டுமே கட்டாயமாக இருக்கக் கூடாது என்று சச்சின் டெண்டுல்கர் முதல் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், எந்த நிலையிலும் மிகவும் வெளிப்படையாக பேசக் கூடிய முன்னாள் துவக்க ஆட்டக்காரரான கவுதம் கம்பீர், இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவருடைய மகள் அசின், யோ - யோ பயிற்சியில் தேறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார் கம்பீர்.

அப்படியானால், அசினுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்று குசும்பு கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது. கம்பீரின் மகள் எவ்வளவு அழகாக யோ யோ சோதனை செய்துள்ளார் என்பதை மட்டும் பார்த்து ரசிங்க.

Story first published: Monday, July 23, 2018, 15:55 [IST]
Other articles published on Jul 23, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+