Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரவி சாஸ்த்ரி, கோலி மீது பகீர் குற்றச்சாட்டு.. உண்மையை உடைத்த சுனில் கவாஸ்கர்..!!

ராஞ்சி; இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி ராஞ்சியில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியின் போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் நேரலையில் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார்

2வது டி20 போட்டியில் ஹர்சல் பட்டேல் அறிமுக வீரராக களமிறங்கினார். அவருக்கு இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அஜித் அகார்கர் இந்திய அணியின் கேப்பை வழங்கி கவுரவித்தார்

இந்த காட்சி போட்டியின் போது ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை பார்த்த கவாஸ்கர் , முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி மற்றும் விராட் கோலி மீது காட்டமாக ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தார்

பாரம்பரிய முறை

பாரம்பரிய முறை

சர்வதேச போட்டியில் எந்த வீரர் அறிமுகமானாலும் அவருக்கு போட்டி தொடங்குவதற்கு முன் தொப்பி வழங்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்படும். இந்திய அணியை பொறுத்தவரை மைதானத்தில் உள்ள முன்னாள் வீரர்களை வரவழைத்து தொப்பியை வழங்கி, அந்த வீரரை வாழ்த்தி ஊக்கம் தர சொல்வார்கள். இந்த பாரம்பரியத்தையே அனைத்து அணிகளும் பின்பற்றின

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

இந்திய அணி காலம் காலமாக பின்பற்றி வந்த முறையை ரவி சாஸ்த்ரியும், விராட் கோலியும் மாற்றி விட்டதாக நேரலையின் போதே கவாஸ்கர் ஆதங்கமாக குற்றஞ்சாட்டினார். தற்போது பயிற்சியாளர் டிராவிட்டும், ரோகித் சர்மாவும் ஹர்சல் பட்டேலுக்கு அகார்கரை வைத்து தொப்பி வழங்கியதன் மூலம் பாரம்பரியத்தை கடைபிடிப்பதாக கவாஸ்கர் பாராட்டு தெரிவித்தார். இதே போன்ற பணியை கும்ப்ளே செய்த போது, அவர் மாற்றப்பட்டதாக கவாஸ்கர் மறைமுகமாக குற்றஞ்சாட்டினார்.

அமைதி

அமைதி

கவாஸ்கர் நேரலையில் இந்த குற்றச்சாட்டை வைத்த போது மற்ற முன்னாள் வீரர்களும், வர்ணனையாளர்களும் அமைதி காத்து, அவரது கருத்தை ஆதரித்தனர். முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரியும், கோலியும் தான்தோன்றித்தனமாக நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது முன்னாள் வீரர் ஒருவரே வெளிப்படையாக கூறியது, இந்திய கிரிக்கெட் எந்த நிலையில் இருந்தது என்பதை காட்டுகிறது

புதிய தொடக்கம்

புதிய தொடக்கம்

ரவி சாஸ்த்ரியும், கோலியும் இந்திய அணியின் நிர்வாகத்தில் பல தடாலடி மாற்றங்களை கொண்டு வந்தனர். இதனை எல்லாம் சரி செய்து, அணியை ஒழுங்கு படுத்துவதே டிராவிட், ரோகித் சர்மாவுக்கு பெரிய பணியாக இருக்கும். இந்த நிலையில், டெஸ்ட்,ஒருநாள் போட்டிகளுக்கு கோலி கேப்டனாக திரும்பினால் அவர் ராகுல் டிராவிட் சொல்வதை கேட்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் இப்படி ஒரு பிரச்சினை வந்த போது தான் கோலியின் அழுத்தத்தால் கும்ப்ளே மாற்றப்பட்டார்.ஆனால் அப்படி ஒரு சுதந்திரத்தை அனுபவிக்கும் நிலையில் விராட் கோலி இல்லை என்பது அவருக்கே நன்கு தெரியும்.

Story first published: Friday, November 19, 2021, 20:47 [IST]
Other articles published on Nov 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+