ட்ரிபுள் சென்சுரி அடிச்ச கருண் நாயர் நல்ல வீரர் இல்லையா? ஒரு வாய்ப்பு கூட இல்லையா?
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர்களால் சர்வதேச அரங்கில் இது வரை மூன்று முறை ட்ரிபுள் சென்சுரி அடிக்கப்பட்டுள்ளது. இரண்டு முறை சேவாக் அந்த சாதனையை நிகழ்த்தினார்.
அடுத்து, அந்த சாதனையை செய்த ஒரே இந்தியர் கருண் நாயர். ஆனால், அதன் பின் ஆடிய ஒரு தொடரில் அவரது ஆட்டம் சரியாக இல்லை. அதன்பின், அவரால் இந்திய டெஸ்ட் அணியில் ஆட முடியவில்லை. பல வீரர்களும் அவரது இடத்தை எடுத்துக் கொண்டனர்.
தற்போது நீண்ட நாட்கள் கழித்து போராடி உத்தேச அணியில் இடம் பிடித்தார் கருண் நாயர். ஆனால், பதினோரு பேர் கொண்ட அணியில் அவரால் இடம் பிடிக்க முடியவில்லை.

இந்திய பேட்டிங் பிரச்சனை
தற்போது இந்திய அணியில் பெரிய தலைவலியாக இருப்பது பேட்டிங் தான். துவக்க வீரர்கள் யாரும் சரியில்லை. அவர்கள் சொதப்பினால் மிடில் ஆர்டர் வீரர்களாவது அணியை தூக்கி நிறுத்த வேண்டும். அவர்களும் சொதப்பி வருவதால் செய்வதறியாது இருக்கிறது இந்தியா. கருண் நாயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்தான். அவருக்கு இந்த தொடர் முழுவதும் வாய்ப்பே அளிக்கவில்லை.

ஹனுமா விஹாரியை விட...
ஐந்தாம் போட்டிக்கு கவாஸ்கர் உள்ளிட்ட பலரும் கருண் நாயர், ப்ரித்வி ஷாவுக்கு வாய்ப்பளிக்கலாம் என கூறி வந்தனர். ஹனுமா விஹாரி பற்றி மிகச் சிலரே பேசினர். இந்த நிலையில் ப்ரித்வி ஷா, கருண் நாயர் இருவரையும் விட்டு விட்டு, பகுதி நேர சுழல் பந்துவீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேனான ஹனுமா விஹாரிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. கவாஸ்கர் இதைக் கண்டு பொங்கியுள்ளார்.

கருணுக்கு பதில் சொல்லுங்கள்
கருண் நாயரை அணியில் எடுக்காமல் இருப்பதற்கு அவருக்கு பதில் சொல்ல வேண்டும் என கூறியுள்ளார் கவாஸ்கர். இதுவரை ஆறு பேட்ஸ்மேன், ஐந்து பந்துவீச்சாளர் என்ற முறையில் இந்தியா ஆடிய நிலையில், ஐந்தாம் போட்டியில் ஏழு பேட்ஸ்மேன்கள், நான்கு பந்துவீச்சாளர்கள் கொண்டு களம் இறங்கும்போது கருணுக்கு ஏன் வாய்ப்பளிக்கவில்லை என நியாயம் கேட்கிறார் கவாஸ்கர்.

ட்ரிபுள் சென்சுரி அடித்தவருக்கு பதில்?
எத்தனை இந்தியர்கள் ட்ரிபுள் சென்சுரி அடித்தார்கள்? சேவாக் இரண்டு முறை, கருண் நாயர் ஒருமுறை. அவருக்கு ஒரு வாய்ப்பு கூட கொடுக்க மாட்டீர்களா? அவருக்கு என்ன சொல்லப் போகிறீர்கள்? நாங்கள் உன்னை நல்ல கிரிக்கெட் வீரர் என நினைக்கவில்லை என கூறப் போகிறீர்களா? என தன் ஆதங்கத்தை கொட்டியுள்ளார் கவாஸ்கர்.


Click it and Unblock the Notifications