Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"டீம்" எது என்பது முக்கியமில்லை.. டோணி இருந்தா அதுதான் "கிங்".. கவாஸ்கர்

டெல்லி: ஐபிஎல்லைப் பொறுத்தவரை எந்த அணி என்பது முக்கியமில்லை. ஆனால் டோணி எந்த அணியில் இருக்கிறாரோ அதுதான் முக்கியம். அவர் இடம் பெறும் அணியே அந்தத் தொடரை வெல்லும் முதல் வாய்ப்பைப் பெறும் என்று பழம்பெரும் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

ஐபிஎல்லில் புதிதாக இரண்டு அணிகள் சேர்ந்துள்ளன. இந்த அணிகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார் கவாஸ்கர். ராஜ்கோட் அணிக்கு இந்திய வீரர் ஒருவரே தலைமை தாங்க வேண்டும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

ஒரு வேளை பிரன்டன் மெக்கல்லம் கேப்டனாக்கப்பட்டால், நிச்சயம் பயிற்சியாளராக ஒரு இந்தியரையே நியமிக்க வேண்டும் என்பது கவாஸ்கரின் கருத்தாகும்.

இந்தியரே கேப்டனாக வேண்டும்

இந்தியரே கேப்டனாக வேண்டும்

ஐபிஎல் புதிய அணிகள் குறித்து கவாஸ்கர் கூறுகையில், ஐபிஎல் ராஜ்கோட் அணியைப் பொறுத்தவரை இந்திய கேப்டனே இருக்க வேண்டும். அப்போதுதான் உள்ளூர் வீரர்கள், உள்ளூர் சூழல் குறித்து அறிந்து, தெரிந்து அணியை வழி நடத்த முடியும்.

வெளிநாட்டுக் கேப்டன் சரிப்பட்டு வராது

வெளிநாட்டுக் கேப்டன் சரிப்பட்டு வராது

ஐபிஎல் என்று பெயர் வைத்துக் கொண்டு வெளிநாட்டுக் கேப்டனை வைப்பது சரியாக இருக்காது. பொருத்தமாகவும் இருக்காது. உள்ளூர் கேப்டன்தான் சரியாக இருக்கும்.

பலம் பலவீனம்

பலம் பலவீனம்

இந்திய வீரர் கேப்டனாக இருக்கும் பட்சத்தில் உள்ளூர் நிலவரம், வீரர்களின் பலம், பலவீனம் உள்ளிட்டவற்றை அறிந்து உத்திகளை வகுக்க முடியும்.

இல்லாவிட்டால் இந்திய பயிற்சியாளர்

இல்லாவிட்டால் இந்திய பயிற்சியாளர்

ஒரு வேளை பிரன்டன் மெக்கல்லம் கேப்டனாக்கப்பட்டால், பயிற்சியாளராக இந்தியர் ஒருவரே நியமிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அணிக்கு நல்லது.

புனேவுக்கே வெற்றி வாய்ப்பு

புனேவுக்கே வெற்றி வாய்ப்பு

9வது ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லும் முதல் வாய்ப்பை நான் புனே அணிக்கே கொடுப்பேன். காரணம் டோணி அங்கு இருக்கிறார்.

டோணிதான் முக்கியம்

டோணிதான் முக்கியம்

எந்த அணி என்பது முக்கியமல்ல. டோணி எங்கிருக்கிறார் என்பதே முக்கியம். அவர் அப்படிப்பட்ட அருமையான வீரர், கேப்டன். எந்தப் போட்டியையும் திருப்பி விடும் ஆற்றல் அவருக்கு உண்டு. அஸ்வின் வேறு இருக்கிறார். பாப் டூ பிளசிஸ் இருக்கிறார்.

டோணி ஒரு பிராண்ட்

டோணி ஒரு பிராண்ட்

டோணியைப் பொறுத்தவரை அவர் வீரர் மட்டுமல்ல, கேப்டன் மட்டுமல்ல, மாறாக அவர் ஒரு பிராண்ட். எந்த அணியும் டோணி போன்ற வீரர்களையே விரும்பும். அந்த வைகயில் புனே அணி, டோணியைத் தேர்வு செய்திருப்பது சரியான முடிவாகும்.

புனேதான் ஸ்டிராங்

புனேதான் ஸ்டிராங்

என்னைப் பொறுத்தவரை ராஜ்கோட் அணியை விட சற்று பலமானதாக புனே தோன்றுகிறது. சமச்சீராக இருப்பதாக தெரிகிறது. குஜராத் மக்களுக்கு ராஜ்கோட் நிச்சயம் மகிழ்ச்சி தரும் என்று நம்பலாம் என்றார் கவாஸ்கர்.

Story first published: Wednesday, December 16, 2015, 13:16 [IST]
Other articles published on Dec 16, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+