சரியாக மீட்டிங்கின் போது பற்ற வைத்த கவாஸ்கர்.. பிசிசிஐ கூட்டத்தில் காரசார புகார்கள்.. கோலிக்கு குறி?
டெல்லி: பிசிசிஐ அமைப்பின் வருடாந்திர கூட்டம் தற்போது நடக்க உள்ள நிலையில் முன்னாள் வீரர் கவாஸ்கர் வைத்த புகார்கள் குறித்து இதில் விவாதங்கள் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்தியா பிஸியாக உள்ளது. இந்த நிலையில் இன்னொரு பக்கம் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அமைப்பின் வருடாந்திர கூட்டம் தற்போது நடக்க உள்ளது.
இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவரங்கள் நடத்த போவதாக தகவல்கள் வருகிறது. பல முக்கிய முடிவுகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது என்றும் கூறுகிறார்கள்.

என்ன பேசுவார்கள்
இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் மூன்று முக்கியமான விஷயங்களை பேச உள்ளனர். அடுத்த வருடம் இந்தியாவில் நடக்க உள்ள உலகக் கோப்பை டி 20 தொடர் குறித்து முடிவுகளை எடுக்க உள்ளனர். இந்த தொடருக்கு வரி விலக்கு கோருவது தொடர்பாகவும், இந்திய அணி தேர்வு தொடர்பாகவும் ஆலோசனை செய்ய உள்ளனர்.

ஆலோசனை
அடுத்தடுத்த அடுத்த வருட ஐபிஎல் குறித்தும், ஏலம் குறித்தும், புதிய இரண்டு அணிகளை அடுத்த வருடம் ஐபிஎல்லில் சேர்க்கலாமா, 2022ல் சேர்க்கலாமா என்பது குறித்தும் ஆலோசனை செய்ய உள்ளனர். பெரும்பாலும் அடுத்த வருடம் இரண்டு ஐபிஎல் அணிகள் சேர்க்கப்படாது என்று கூறுகிறார்கள்.

தேர்வு
அதேபோல் இந்திய அணியின் தேர்வுக்குழுவில் புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யவும் இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது என்று கூறப்படுகிறது. தேர்வு குழுவின் புதிய உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்களை இன்று நடக்கும் பரிசீலனை செய்ய போவதாக கூறுகிறார்கள்.
Recommended Video


கவாஸ்கர்
இந்த மீட்டிங்கில் கவாஸ்கர் வைத்த புகார்கள் குறித்தும் விசாரணை நடத்த உள்ளனர். அதாவது இந்திய அணியில் கேப்டன் கோலிக்கும் மற்ற வீரர்களுக்கும் இடையில் பாரபட்சம் காட்டப்படுவதாக கவாஸ்கர் கூறி இருந்தார். இதற்கு முன்பும் சிலர் இதே விமர்சனங்களை வைத்து இருந்தனர். இன்று மீட்டிங் நடக்க உள்ள நிலையில் நேரம் பார்த்து கவாஸ்கர் புகார் வைத்தார்.

பிசிசிஐ
பிசிசிஐ அமைப்பில் இருக்கும் சில அதிகாரிகளும் இதே போல கருதுகிறார்கள். இதனால் இன்று நடக்கும் மீட்டிங்கில் கோலி குறித்தும், அவரின் அணி தேர்வு குறித்தும் விவாதிக்க உள்ளனர். இதில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications