Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மாலை 6 மணிக்கு மேல் வார்னே வேற மாதிரி..!! கவாஸ்கர் கூறிய கருத்தால் சர்ச்சை.. ரசிகர்கள் எதிர்ப்பு

மொஹாலி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் வார்னே மறைவுக்கு அவருடைய வாழ்க்கை முறை தான் காரணம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

Shane Warne இளம் வீரர்களை வைத்து சாதித்த கதை | IPL | Oneindia Tamil

தாய்லாந்து இன்ப சுற்றுலா சென்ற போது வார்னே அவரது அறையில் மயங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே அவரது மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சியில் வார்னேவின் மறைவு குறித்து பேசிய கவாஸ்கர்,. 52 வயது எல்லாம் இயற்கை ஏய்துவதற்கான வயதா, இந்த செய்தியை கேட்டதும் எனக்கு அதிர்ச்சி தான் ஏற்பட்டது. அவர் ஒரு சிறந்த சுழற்பந்துவீச்சாளர் அணிக்காக எப்போதும் விளையாடியவர்.

வேறு உலகம்

வேறு உலகம்

வார்னேவுடன் நான் விளையாடியது இல்லை. ஆனால் கிரிக்கெட் வர்ணனையின் போது இருவரும் சேர்ந்து பணியாற்றி உள்ளோம். அப்போது மாலை நேரத்தில் பல பொழுதுகளை சேர்ந்து கழித்துள்ளோம். வார்னே மாலை 6 மணிக்கு மேல் வேறு ஒரு உலகத்தில் இருப்பார். மது, புகை என அனைத்து பழக்கமும் அவருக்கு உள்ளது

இதயம் ஏற்கவில்லை

இதயம் ஏற்கவில்லை

வார்னே மறைவுக்கு அவருடைய வாழ்க்கை முறையும் ஒரு காரணம். வார்னேவின் சில பழக்கங்களை அவருடைய இதயம் ஏற்று கொள்ளவில்லை. ஒரு இதயம் எவ்வளவு தான் தாங்கி கொள்ளும். வார்னேவின் இறப்புக்கு அது தான் காரணம். இல்லையேனில் 52 வயது எல்லாம் சாகும் வயது அல்ல.

நம்பர் 2

நம்பர் 2

வார்னே சிறந்த சுழற்பந்துவீச்சாளர் தான். ஆனால் என்னை பொறுத்தவரை அவர் நம்பர் 2 தான். என்னை பொறுத்தவரை முரளிதரன் தான் நம்பர் 1 வீரர். வார்னே இந்திய மண்ணில் சிறப்பாக செயல்பட்டது கிடையாது. ஆனால் முரளிதரன் அப்படி அல்ல. வார்னே குறித்து கவாஸ்வர் அளித்துள்ள இந்த பேட்டிக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

Story first published: Saturday, March 5, 2022, 14:50 [IST]
Other articles published on Mar 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+