இங்கிலாந்துக்கு தான் “கப்” அடிக்கும் வாய்ப்பு அதிகம்.. கவாஸ்கர் அதிரடி! அப்ப இந்தியா?
மும்பை : இந்திய அணி உலகக்கோப்பையில் என்ன செய்யப் போகிறது? எந்த வீரர்களை களமிறக்கப் போகிறது? என்ற விவாதம் ஒருபுறம் நடந்து வருகிறது.
இந்நிலையில், எந்த அணி உலகக்கோப்பை வெல்லும் என்ற பேச்சும் இருக்கிறது. முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கர் தன் கருத்தை கூறுகையில், இங்கிலாந்து தான் உலகக்கோப்பை வெல்லும் என கூறி உள்ளார். அப்ப இந்தியா?

இங்கிலாந்து அணி தயார்
கவாஸ்கர் கூறுகையில் இங்கிலாந்து அணி உலகக்கோப்பை வெல்லும் எனக் கூறுவதற்கு காரணம் இந்த முறை உலகக்கோப்பை அங்கே நடக்கிறது என்பது மட்டுமல்ல. அந்த அணி அதற்கான மாற்றங்களை செய்துள்ளது என குறிப்பிட்டார்.

வலுவான அணி இங்கிலாந்து
2015இல் வங்கதேச அணியிடம் தோற்று உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகிய இங்கிலாந்து அணி அதன் பின் வலுவான அணியாக உருமாறி உள்ளது என இங்கிலாந்து அணியின் மாற்றம் பற்றி கூறிய கவாஸ்கர் அடுத்து இந்திய அணி குறித்தும் கூறினார்.

அனுபவ இந்தியா
இந்தியா கடந்த 2017-2018ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து மண்ணில் கிரிக்கெட் ஆடியதால், அந்த தொடரில் ஆடிய இந்திய வீரர்கள் அந்த நாட்டின் சூழ்நிலை குறித்து நன்கு அறிந்திருப்பார்கள். அது இந்திய அணிக்கு பயனுள்ளதாக இருக்கும் என குறிப்பிட்டார் கவாஸ்கர்.

இந்தியாவுக்கு வாய்ப்பு குறைவு
இருந்தாலும், இந்தியாவை விட இங்கிலாந்து தான் உலகக்கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ளது என கூறியுள்ளார் கவாஸ்கர். கடந்த 2018ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் கூட இந்தியாவால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை என்பது நினைவிருக்கலாம்.

மற்ற அணிகள் எப்படி?
இங்கிலாந்து அணிக்கு முதல் இடமும், இந்தியாவுக்கு இரண்டாம் இடமும் கொடுத்த கவாஸ்கர், பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அரையிறுதி வரை செல்லும் என ஆரூடம் கூறினார். நியூசிலாந்து அணியும் ஆச்சரியம் அளிக்க வாய்ப்புள்ளது என கூறினார்.


Click it and Unblock the Notifications